ஆசிரியர்கள் சிறந்த கற்பித்தலுக்கான ஆலோசனைகள்

 சிறந்த கற்பித்தலுக்கான சில ஆலோசனைகள்  


வகுப்பறை என்பது ஒரு மாணவனின் எதிர்காலத்தை வடிவமைக்கும் முக்கியமான இடமாகும். சிறப்பான கற்பித்தல் என்பது மாணவர்களுக்கு அறிவையும், திறமையையும், ஒழுக்கத்தையும் நேர்மையாக வழங்கும் ஒரு சீரான செயற்பாடாகும். இதனை வகுப்பறையில் செயல்படுத்த சில முக்கிய வழிமுறைகள் இங்கே:

  1. வருடாந்த பாடத்திட்டம் மற்றும் செயற்பாட்டுத் திட்டம் அமைத்தல் ஒவ்வொரு பாடத்திற்கும் முன்னதாக திட்டம் தயாரிக்க வேண்டும். மாணவர்களின் முன்னறிவு, திறன் மற்றும் கடின நிலைகளை நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். பாடங்களை படிப்படியாக எளிய நிலைகளில் இருந்து எடுத்துச் செல்ல வேண்டும்.
  2. மாணவர்களிடம் நட்பு முறை பேணி கற்பித்தல் மாணவர்களுடன் பாசபூர்வமாக நடந்து கொள்ள வேண்டும். அவர்களது எண்ணங்களை மதித்து அவர்கள் சொல்வதை காது தாழ்த்தி கேளுங்கள். நேர் மனப்பாங்கான பேச்சும், ஊக்கமும் அவசியம்.
  3. பாடங்களை வாழ்க்கை நிகழ்வுகளோடு இணைத்துச் சொல்லல். பாடங்களை உண்மை வாழ்க்கை சம்பவங்களோடு தொடர்புபடுத்தி விளக்குங்கள். உதாரணமாக, விஞ்ஞானப் பாடங்களில் சுற்றுச்சூழலை, வீட்டு நிகழ்வுகளை எடுத்துக்கொள்ளலாம்.
  4. பயிற்சி மற்றும் செயல்வழி கற்றல் (Activity-based learning) குழுச் செயற்பாடு, விளையாட்டுப் பயிற்சிகள், கண்காட்சி செயற்பாடுகள், வகுப்பு விவாதங்கள் போன்றவை பயனளிக்கும். மாணவர்கள் கற்றதை செயலில் காண்பிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும்.
  5. தொழில்நுட்ப உதவிகள் பயன்படுத்தல் Smart board, projector, animation video, PPT போன்றவை கற்பித்தலுக்கு உதவியாக இருக்கலாம். இணையவழி கற்றலுக்கான YouTube மற்றும் ஏனைய வீடியோக்கள் போன்றவற்றைச் சேர்த்துக் கற்பிக்கலாம்.
  6. மாணவர் மைய கற்பித்தல் (Student-centered learning) கற்பித்தல் என்பது ஆசிரியர் மையமாக இல்லாமல், மாணவர் மையமாக இருக்க வேண்டும். அவர்கள் கேள்வி கேட்பதற்கும், சிந்திக்கவும், ஆராய்ச்சி செய்யவும் வாய்ப்பு அளிக்க வேண்டும்.
  7. முன்னேற்றத்தை மதிப்பீடு செய்தல் வாரம் ஒருமுறை சிறு மதிப்பீடுகள், வினா-பதில் அம்சங்கள், கருத்துரைகள் மூலம் மாணவர்களின் புரிதலை மதிப்பீடு செய்யகூடுதல் வேண்டும். முன்னேற்றம் இல்லாதவர்களுக்கு கூடுதல் வழிகாட்டுதல் தேவை.
  8. நேர்மறை ஒழுக்கம் மற்றும் கண்ணியம் ஒழுக்கம் கொண்ட ஒரு வகுப்பறை சூழல் கற்பித்தலை எளிமைப்படுத்தும். மாணவர்களின் நல்ல செயல்களை பாராட்டுங்கள். இவ்வாறான விடயங்களில் கூடுதல் கவனம் செலுத்தினால் வகுப்பறை கற்பித்தல் சிறப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. நாம் அடிக்கடி விமர்சிக்கும் டியுஷன் கலாச்சாராமும் தேவைப்படாது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்