தற்போது மாணவர்களில் காணப்படும் நெறிபிறழ்வுக்கு யார் காரணம்?

தற்போது மாணவர்களில் காணப்படும் நெறிபிறழ்வுக்கு யார் காரணம்? 

  

தற்போதைய சூழ்நிலையில் மாணவர்களின் கற்றல் சார்ந்த அனேக பிரச்சினைகளுக்கு பெற்றோர்களின் தவறான அணுகுமுறைகளே காரணம் என பல்வேறு ஆய்வாளர்களால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

#ஆய்வாளர்களினால் #சுட்டிக்காட்ட #விடயங்களில் #சில..

*சில பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளின் முன்னிலையில் ஆசிரியர்கள் ,அதிபர்கள் தொடர்பாக தவறாக விமர்சனம் செய்வதால், பிள்ளைகள் பாடசாலையில் ஆசிரியர்களை மதிப்பதுமில்லை, கீழ் படிவதுமில்லை. இதனால் நாளடைவில் மாணவர்களிடையே நெறிபிறழ்வான நடத்தைகளுக்கு இட்டுச் செல்கின்றன.

*சில பிள்ளைகள்  ஆசிரியருடன் ஏற்படும் சில முரண்பாட்டுக்கான உண்மையான காரணத்தை மறைத்து, பெற்றோர்களிடம் பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தும் போது, அதனை விசாரித்து உண்மைநிலையை அறிய முற்பட்டாமல், குறித்த ஆசிரியருடன் சண்டையில் ஈடுபடுவதால் ஆசிரியர்கள் தவறு செய்யும் பிள்ளைகளை கண்டு கொள்வதில்லை. இதனால் நாளடைவில் பிள்ளைகளிடத்தில் தவறான நடத்தைப்பாங்கு விருத்தியடையும்.

*அனேக பெற்றோர்கள்,  பிள்ளைகளுடன் பாடசாலையில் கற்ற விடயங்கள், பயிற்சிக் கொப்பியை பரிசோதித்தல், நடைபெறாத பாடங்கள்,எதிர் கொண்ட பிரச்சினை போன்றவை தொடர்பாக கலந்துரையாட நேரம் ஒதுக்குவதில்லை. இதனால் பிள்ளைகளுக்கு தங்களது கற்றல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாமல் போவதால், அவர்களின் எதிர்காலம் பாதிப்பு அடையும்.

*பாடசாலைக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதைத் தவிர்த்து, பிரத்யேக வகுப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், பிள்ளைகளுக்கு  பாடசாலைக்குரிய கலாசாரங்கள் விழுமியங்கள்,  சட்டதிட்டங்கள், மாணவர் ஒழுக்கக்கோவை போன்றவற்றைக் கடைப்பிடிக்க தவறுவதால், நாளடைவில் சட்ட திட்டத்தை மதிக்காத சந்ததிகள் உருவாக்கும் அபாயம் உள்ளது.

*சில கிராமப்புற பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளை நகர்ப்புற பாடசாலைகளில் அனுமதித்து, உறவினர் வீடுகள் மற்றும் மாணவர் விடுதியில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். இம் மாணவர்களில் பலர் கெட்ட சகபாடிகளின் தொடர்புகளினால் போதைப் பொருள் பாவனை, வேறு தூர்நடத்தைகளுக்கு அடிமையாவதால் கல்வியில் அக்கறை செலுத்துவதில்லை. இதனால் இவர்களது கல்வி சீர்குலைகின்றன.


*பெற்றோர்களின் தவறான துரித உணவு பழக்கம் காரணமாக பிள்ளைகளிடத்தில் உடற்பருமன், நீரிழிவு, இதயநோய் போன்ற தொற்றா நோய் அதிகரித்து வருவதால், எதிர் காலத்தில் ஆரோக்கியமற்ற சந்ததி உருவாக்க வாய்ப்புள்ளது.

*அனேக பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை வீட்டில் எந்தவொரு வேலையும் செய்ய விடாமல், பெற்றோர்களே சகல வேலைகளையும் செய்வதால், பிள்ளைகள் சோம்பேறியாக மாறி, எதிர்காலத்தில் பிள்ளைகளால் சவால்களை எதிர்கொள்ள முடியாமல் வாழ்க்கையில் தோல்வி அடைவர்.


*சில பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை செல்லம் கொஞ்சும் புரோஜிலர் கோழி போன்று வளர்ப்பதால், பாடசாலையில் ஆசிரியரோ, சகபாடிகளோ கண்டிக்கும் போதும், சமூகத்தில் ஏற்படும் சவால்களையும், சிறிய சிறிய பிரச்சினைகளையும் எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்வதற்கு காரணமாக அமையும்.


*குடும்பக் கஷ்டத்தை மறைத்து, கடன் வாங்கி பிள்ளைகளை பணக்காரப் பிள்ளைக்கு சமமான வசதிகளை செய்து கொடுப்பதால், கல்வி கற்பதில் ஆர்வத்தைக் குறைத்து, எதிர் காலத்திலும் பிள்ளைகள் சொகுசாக வாழ பல்வேறு குற்றச்செயலில் ஈடுபட்டு வாழ்க்கையை தொலைத்து விட வாய்ப்புண்டு.


*சில பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு எமது கலாசாரம், மரபுகள், உறவினர்கள் போன்றவற்றை கற்றுக் கொடுப்பதில்லை. இதனால்தான் சமூக கட்டுப்பாடுகளை மீறி  சில மாணவர்கள் தான்தோன்றித் தனமான நடத்தைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

*பிள்ளைகளை 24 மணிநேரமும் படி படி என் வலியுறுத்துவதாலும், கெட்டிக்காரப் பிள்ளைகளோடு ஒப்பீட்டு அழுத்தம் கொடுப்பதாலும், அளவுக்கு அதிகமாக பிரத்யேக வகுப்புக்கு அனுப்புவதாலும் பிள்ளைகளுக்கு பதகளிப்பு,மன அழுத்தம் ஏற்பட்டு, கற்றல் அடைவு வீழ்ச்சி அடையலாம் அல்லது உள நோயாளியாகலாம்.

*பிள்ளைகளுக்கு முன்னால் போதைப்பொருள் பாவனை, சண்டையிடுதல், கெட்ட வார்த்தை பேசுதல் போன்றவை பிள்ளைகளுக்கு உளரீதியான தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் கெட்டிக்காரப் பிள்ளைகள் கூட பாதிப்பு அடையலாம்.

எமது எதிர்காலச் சந்ததியினரான எமது பிள்ளைகளை சமூகப் பொருத்தப்பாடு உடையவர்களாகவும், சட்ட திட்டங்களை கடைப்பிடிப்பவராகவும் உருவாக்க வேண்டியது, எமது கடமையும் பொறுப்பும் ஆகும்.

#உங்களது #பிள்ளைகளை #எதிர்காலத்தில் #சிறந்த #பிரசையாக்க #பெற்றோர்களாகிய #நாம் #கடைப்பிடிக்க #வேண்டியவை.

*உங்கள் பாடசாலையில் நடைபெறும் சிரமதானம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கூட்டம், பாடசாலை அபிவிருத்திச் சங்கக் கூட்டம் ஆகியவற்றில் கலந்து கொண்டு, உங்களது ஆலோசனை களை முன் வையுங்கள்.

*உங்களது பிள்ளையின் வகுப்பாசிரியர்,பாட ஆசிரியர்கள் ஆகியோருடன் அடிக்கடி தொடர்பு கொண்டு உங்கள் பிள்ளையின் முன்னேற்றம் பற்றி கேட்டறியுங்கள்.

*பாடசாலை விட்டு வந்தவுடன் பிள்ளையுடன் பாடசாலையில் நடந்தவை பற்றி கேட்டறியுங்கள். பயிற்சிக்கொப்பியை பரிசோதியுங்கள், வீட்டுப் பயிற்சி இருப்பின், அதற்கு உதவி செய்யுங்கள்.

*கடினமான பாடங்களுக்கு மட்டும் தேர்ச்சி பெற்ற ஆசிரியரிடம் பிரத்யேக வகுப்புக்கு அனுப்புங்கள்.

தினமும் படித்த பாடங்களை வீட்டில் படிக்க ஊக்குவியுங்கள்.அத்தோடு இலவச பாடநூல்களை வாசித்து விளங்கிக் கொள்ள உதவுங்கள்.


*தினமும் ஒரு மணித்தியாலம் வியர்வை சிந்தி விளையாட அனுமதியுங்கள்.அத்தோடு மனதிற்கு இதமளிக்கும் இசை,நாடகம் போன்றவற்றில் ஈடுபட வாய்ப்பு வழங்க வேண்டும்.


*வீட்டு வேலைகளில் உங்களுடன் ஈடுபட சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.தங்களது வேலைகளை சுயமாக செய்ய ஊக்குவிக்க வேண்டும்.


*வளர்ந்த பிள்ளைகளை வீட்டு நிகழ்வுகளில் தலைமை தாங்கி நடத்தவும், குடும்பம் தொடர்பான முடிவுகளை எடுக்கும் போது அவர்களது பங்களிப்பை பெற்றுக் கொள்ளவும் வேண்டும்.


*உறவினர் வீடுகளில் நிகழும் நிகழ்வுகளில் உங்களது பிள்ளைகளை கலந்து கொள்ளச் செய்வதன் மூலம் பிள்ளைகளுக்கு சமூக சம்பிரதாயங்களை கற்றுக் கொடுங்கள்.


*வீடுகளில் பிள்ளைகளுக்கு முன்னால் போதைப் பொருள் பாவனை,சண்டையிடுதல் போன்றவை தவிர்க்க வேண்டும்., பெற்றோர்கள் போதைப் பொருட்களை பாவிக்கும் போது பிள்ளை அதனை இலகுவாக பழகிக் கொள்ள வாய்ப்பு உண்டு.

*தரம் 11 வரை உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள பாடசாலையில் உங்கள் பிள்ளைகளை அனுமதியுங்கள்.ஏனெனில் பதிமவயது வரை பிள்ளைகளுக்கு உங்கள் கண்டிப்பும், கண்காணிப்பும் அவசியம்.இந்த வயது பிள்ளைகள் விரைவில் சமூக விரோதிகளின் கையில் சிக்கி பாதிப்பு அடையலாம்.


*உயர் தர வகுப்பு பிள்ளைகளை நகர்ப்புற பாடசாலைகளில் அனுமதித்து , அவர்களின் விருப்பப்படி பொருத்தமான பாடப்பிரிவை தேர்வு செய்ய கற்க சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.


*உங்கள் பிள்ளையின் நண்பர்கள் பற்றி தேடிப் பாருங்கள். நெறிபிறழ்வான நடத்தையுடைய நண்பர்களுடன் சுவாசத்தை துண்டியுங்கள்.தினமும் வளர்ந்த பிள்ளைகளுடன் சில நிமிடங்கள் மனம் விட்டு பேசி, அவர்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வையுங்கள்.


*கைபேசி பாவனை, நீண்ட நேரம் இணையதளத்தில் உலாவுதல், வீடியோ கேம் விளையாடுதல் போன்ற வற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள்.


*தனியாக அறையை மூடிக் கொண்டு,படிப்பதைக் கட்டுப்படுத்துங்கள். இரவில் நண்பர்களுடன் அரட்டை அடிப்பதைக் கட்டுப்படுத்துங்கள்.

Thanks : Internet Copy

கருத்துரையிடுக

0 கருத்துகள்