புதிய கலைத்திட்டத்திற்னாக மாற்றம் தரம் -1 க்கு (2026) எப்படியானது
புதிய கலைத்திட்ட மாற்றமானது 21 ஆம் நூற்றாண்டின் திறன்களை (21st century skills) அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன்படி தரம் 1 இற்கான கலைத்திட்ட மாற்றங்களைப் பின்வரும் துறைகள் தொடர்பாக நோக்கலாம்.
1. பாட உள்ளடக்கங்களில் மாற்றம்.
2. வாரத்துக்கான நேர ஒதுக்கீட்டில் மாற்றம்.
3. கற்றல் - கற்பித்தல் முறைகளில் மாற்றம்.
4. கணிப்பீட்டு முறைகளில் மாற்றம்.
1. பாட உள்ளடக்க மாற்றங்கள்
தாய்மொழிப் பாடத்தில் மாற்றமடைந்துள்ள விதம்.
தற்போதுள்ள கலைத்திட்டத்தில்
- திறன்கள் (LSRW)
- தேர்ச்சிகள்
- விடய உள்ளடக்கம்
- கற்றல் பேறு
என்றவாறு அமைந்திருந்தது. இதில் கற்றல் பேறு என்பது ஒரு பாட முடிவில் அடையக்கூடியதாக இருந்தது. புதிய கலைத்திட்டத்தில் இது முற்று முழுதாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதிய கலைத்திட்டத்தில்
- மொழியின் பணி
1. SLF - Social Language Function
2. ALF - Academic Language Function
- கற்றல் பேறு
- விடய உள்ளடக்கம்
- சிறப்பான மொழித்திறன்கள் (LSRW)
- செயலாற்றுகைத் தர நியமங்கள்
- கணிப்பீட்டு நியதிகள் (Rubrics)
என்ற ஒழுங்கில் காணப்படுகின்ற.
அத்துடன் மொழிப்பாடத்துக்கு 3 புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.
1. முன்மொழித் தேர்ச்சிகளுக்கான புத்தகம்
2. வாசிப்பு நூல்
3. செயல்நூல்
இதே போன்று ஏனைய பாடங்களிலும் நிறைய மாற்றங்கள் நிழ்ந்துள்ளன.
2. வாரத்துக்கான நேர ஒதுக்கீடு
முன்னைய கலைத்திட்டத்தில் தரம் 1 இற்காக வாரம் ஒன்றிற்கு 21:15 மணித்தியாங்கள் ஒதுக்கப்பட்டன. புதிய கலைத்திட்டத்தில் 23:45 மணித்தியாலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே, நேர அட்டவணையில் நாள் ஒன்றுக்கு 30 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. (முஸ்லிம் பாடசாலைகள் வெள்ளிக்கிழமைக்கான நேரத்தை ஏனைய தினங்களில் பங்கிட வேண்டும்)
3. கற்றல் கற்பித்தல் முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்
கற்றல் கற்பித்தல் முறைகள் 21ஆம் நூற்றாண்டின் திறன்களை வெளிக்கொணரும் விதமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதன்போது
* Learning skills
* Literacy skills
* Life skills
எனும் திறன்களை அடிப்படையாகக் கொண்டு அமைதல் வேண்டும். அத்துடன் Authentic முறையில் செயற்பாடுகள் அமைய வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ES & ERA பாடமானது STEM அடிப்படையில் கற்பிக்கப்படல் வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று STEAM முறை பின்பற்றப்பட்டாலும் Aesthetic பாடம் தனியாகக் கற்பிக்கப்படுவதால், ES & ERA பாடத்தில் STEM நடைமுறைப்படுத்தப்படும். ES & ERA பாடத்தில் உருவாக்கும் பொருட்கள் பயன் மிக்கனவாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
4. கணிப்பீட்டு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்
ஒப்பீட்டளவில் கணிப்பீட்டு முறையில் சிறந்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதுவரையில் காணப்பட்ட ELC, DLC என்பன நீக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பாடவேளையின் இறுதியிலும் கணிப்பீடு செய்ய வேண்டிய செயலாற்றுகைத் தர நியமங்களும், கணிப்பீட்டு நியதிகளும் தரப்ப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில் மாணவர்களின் பாண்டித்திய மட்டம் கணிப்பீடு செய்யப்பட்டு அறிக்கை ஒன்றைப் பேண வேண்டும். செயலாற்றுகைத் தர நியமங்கள் 4 மட்டங்களில் கணிப்பீடு செய்யப்படும். (சில கற்றல் பேறுகளுக்கு மட்டும் 2 மட்டங்கள்)
அடைவுமட்டத்தை கணிப்பிடும் முறை.
1.மிக. நன்று / அதி சிறப்பு / மேம்பட்ட நிலை ( √ +)
2. நன்று / சிறப்பு / திறமையான நிலை (√)
3. சாதாரண நிலை / அடிப்படை நிலை (•)
4. சாதாரண நிலையிலும் குறைவு (• -)
இவை தொடர்பாக தரம் 1, 2 கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் பயிற்றுவிக்கப்படுவர்.
S. Amjeth Khan (SLEAS - II)
NDT(Primary), BA, PGDE, MEd
Deputy Director of Education
(Primary Education)
பிரதி - இணையம்
0 கருத்துகள்