உணர்ச்சிகளின் மொழி: "பெண்கள் சிக்கலானவர்களா?" - ஓர் உளவியல் பார்வை
பல ஆண்கள் அடிக்கடி ஒரு வரி சொல்லுவாங்க: “பெண்களை புரிஞ்சிக்க முடியாதே!” அப்படின்னு. இந்த ஒரு வாக்கியத்துல இருந்தே நம்ம சமூகம் பெண்களைப் பற்றியும், உணர்ச்சிகளைப் பற்றியும் எவ்வளவு குறைவான புரிதலோட இருக்கும் என்று தெரிகிறது.
உண்மையில் பிரச்சனை “பெண்கள் கம்ப்ளிக்கேட்டட்”ன்னு இல்ல; உணர்ச்சிகளைப் புரிஞ்சிக்க கற்றுக் கொள்ளாத மனசுகள் தான், “Why can’t we understand girls?”ன்னு கேட்கும்!!
ஒவ்வொரு கேள்வியும், “நமக்கு உணர்ச்சிக் கல்வி எவ்வளவு குறைவு?”ன்னும் சத்தமில்லாமே சொல்றது. சின்ன வயசிலேயே ஆண்களுக்கும் பெண்களுக்கும் கற்றுக் கொடுக்கப்படும் message ரொம்ப வெவ்வேறானது.
ஆண் குழந்தைக்கு “அழாதே”, “strongஆ இரு”, “softஆ இருந்தா weakனு நினைப்பாங்க”ன்னு சொல்லுறோம்.
பெண் குழந்தைக்கு “adjust பண்ணு”, “நேரா பேசாதே”, “வீட்டுக்காக தாங்கணும்”ன்னு சொல்லுறோம்.
இதே இரண்டு scripts தான் பெரியவங்களான பிறகும் காதல், திருமணம், relationship எல்லாத்திலும் நடக்க ஆரம்பிக்கும். ஆண்களுக்கு தன் உணர்ச்சியை கண்டுபிடிப்பதே கஷ்டமாகி விடும்; பெண்களுக்கு தன் உணர்ச்சியை நேரா சொல்வது safe இல்ல என்று தோன்றத் தொடங்கும். இப்படி இருவரும் இரண்டு extreme-ல நிக்கும்போது, naturally misunderstandings create ஆகும்.
“பெண்களே புரியல”.
ஒரு பெண்ணின் behaviour ஐ வெளியிலிருந்து மட்டும் பார்த்தால், அது பல நேரம் “டிராமா”, “இரண்டு மனசு” மாதிரி தோன்றலாம். இன்று பேசுவாள், நாளை silent. இன்று laughing, நாளை crying. “எதுவும் இல்ல”ன்னு சொல்லியும், faceல clearly something wrong. ஆனால் அவளின் உள்ளங்கையில் ஓடிக்கொண்டு இருக்கும் real dialogue வேற மாதிரி: “நான் என்ன நொந்திருக்கேன்னு openஆ சொல்லிட்டேனா, அவன் என்ன பத்தி என்ன நினைப்பான்?”, “நான் ஏற்கனவே எத்தனை தடவை சொல்லியிருக்கேன்னு, இனிமேலாவது அவன் ஒரு வார்த்தை சொல்லாமலே புரிஞ்சிக்கணும்னு ஆசை”, “நான் பேச ஆரம்பிச்சா சண்டை ஆகிடுமோ?” இப்படி fear of conflict, fear of rejection, “என்னை யாரும் உண்மையா கேட்டு honour பண்ணுவாங்கா?” என்ற சந்தேகம் தான் அவளை indirect ஆன language use பண்ண வைக்கிறது.
நமக்குப் பாக்கும்போது அது “outcome- Acting” போல இருக்கலாம்; ஆனா அவளுக்கு அது self-protection. இது மட்டும் பெண்களின் பிரச்சனை இல்ல. ஆண்களின் உள்ளுல என்ன நடக்குதுன்னு பாத்தாலும், அவர்களுக்கும் clear emotional vocabulary இல்லாமல் இருக்கும். அவருக்கு anger, frustration, shame, hurt ஆகிய எல்லா feelings-யும் ஒரே ஒரு reaction-ஆக – “சத்தம்”, “distance”, “avoid”, “joke பண்ணி கழித்தல்” – ஆகி விடும்.
தன் உள்ளுணர்ச்சியைப் பார்க்க, பெயர் வைக்க, calmஆ சொல்லக் கற்றுக் கொள்ளாதவருக்கு, மற்றவர் தன் வலியை expression பண்ணுவது “அவசியமில்லாத complication” மாதிரி தோன்றும். அப்போ protection mode என்ன சொல்கிறது? “பெண்களே ரொம்ப கம்ப்ளிக்கேட்டட்”ன்னு label போட்டுட்டோம்; அப்படின்னா நமக்கே learn பண்ண வேண்டிய தேவையும் இல்லாதது போல ஆகிடும்.
அப்படின்னா “பெண்களைப் புரிஞ்சிக்க முடியாதது” ஒரு வாழ்க்கை உண்மைஆ?
இல்ல, relationship என்பது ஒரு skillன்னு ஒப்புக்கொள்வோம்னா answer மாறிடும். Listening, empathy, எந்த feeling-க்கு என்ன வார்த்தை use பண்ணலாம்னு கற்றுக்கொள்வது, boundaries வைப்பது, “நான் இப்படி தவறுசெய்துட்டேன்”ன்னு சொல்லக் கற்றுக்கொள்வது – இவையெல்லாம் practice வேண்டும்.
ஒரு பெண்ணை புரிஞ்சிக்கணும்னு genuinely ஆசை இருந்தா, first step என்ன தெரியுமா?
“நான் என்ன உணர்றேன்னு எனக்கே புரியுமா?”ன்னு கேட்பது.
தன் fear, jealousy, insecurity, love, loneliness எல்லாத்துக்கும் உள்ளே language கண்டு பிடிக்கத் தொடங்கினா, அடுத்த மனிதரின் feeling-களைப் பற்றி curiosity, கருணை நிலையிலிருந்து கேக்கலாம். “அவள் என்ன பத்தி என்ன சொல்றா?”ன்னு defence-ல கேட்காமல், “அவளுக்கு இப்போ உள்ளே என்ன pain இருக்கு?”ன்னு கேட்கத் தொடங்கினால்தான் understanding open ஆகும்.
இன்னொரு முக்கிய point – “பெண்களைப் புரிஞ்சிக்க முடியல”ன்னு சொல்லுற sentence, பலப் பெண்களின் அனுபவத்தை invisiblise பண்ணும். அவர்கள் பல வருடங்களாக “என் words-ஐ யாராவது interrupt பண்ணாம கேட்கணும்”, “என் feelings validன்னு யாராவது சொல்றத கேக்கணும்னு” quietly காத்திருக்காங்க. அவர்களின் longing, vulnerability, steps to communicate – இதை skip பண்ணிட்டு “அவங்க தான் confusing”ன்னு சொன்னால், நம்ம எல்லாம் emotional illiteracy-யை normalஆ accept பண்ணிட்டோம்னு அர்த்தம்.
அதற்கு பதிலா, நம்ம generation “எனக்கு புரியல. நான் கேட்டு கற்றுக்கொள்ள ரெடி”ன்னு சொல்லினா – அத்தனை பெரிய relational change ஆரம்பமாகும். அதனால “Why can’t understand girls?”ன்னு கேட்கும் நல்ல இடத்தை, கொஞ்சம் deepஆ மாற்றிப் பார்: “Why didn’t anyone teach me how to understand emotions – mine and hers?”ன்னு.
இந்தக் கேள்வி blame இல்லாமல் responsibility எடுத்துக்கொள்ள வைக்கும். பெண்ணை decode பண்ணும் முயற்சி விடுத்து, உணர்ச்சியின் language கற்றுக்கொள்ளும் முயற்சி ஆரம்பிக்கணும். அப்படின்னா, “பெண்கள் கஷ்டம்”ன்னு சொல்லுறது மெதுவா குறைந்து, “நாம் இருவரும் மனிதர்கள்; இரண்டு மனங்களையும் கற்றுக்கொள்ள நேரம் தேவை”ன்னு உணர்வு அதிகரிக்கும். அந்த நாள் தான், “பெண்களைப் புரிஞ்சிக்க முடியாது”ன்னு general statement இல்லாம, “அவளைப் புரிஞ்சிக்க நான் இன்னும் கற்றுக் கொண்டிருக்கும் பாதைல இருக்கேன்”ன்னு honest statement ஆக மாறும்.
Counselling Psychologist

0 கருத்துகள்