இன்றைய காலத்தில் மொபைல் போன் தொலைவது போவதற்கு முன் நாம் செய்ய வேண்டியது என்ன?

 இன்றைய காலத்தில் மொபைல் போன் தொலைவது போவதற்கு முன் நாம் செய்ய வேண்டியது என்ன?  


🔴🔴இன்றைய காலத்தில் மொபைல் போன் தொலைவது என்பது

👉 பண இழப்பு மட்டும் அல்ல
👉னிப்பட்ட தகவல்கள், வங்கி விவரங்கள், புகைப்படங்கள், சமூக வலைதள கணக்குகள் அனைத்தும் ஆபத்துக்குள்ளாகும் விஷயம்.
அதனால் மொபைல் தொலைவதற்கு முன்பே இவற்றை இன்று itself செய்து வைத்துக் கொள்ளுங்கள் ⬇️

1️⃣ IMEI எண்ணை உடனே பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள்

📌 *#06# டயல் செய்யுங்கள்
📌 திரையில் வரும் 15 இலக்க IMEI எண்ணை
📌 ஒரு காகிதத்தில் / டைரியில் எழுதி பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்
👉 போலீஸ் புகார் கொடுக்க மிக முக்கியமானது இதுதான்.

2️⃣ Gmail / iCloud கணக்கு விவரங்களை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்
பலர்:
❌ கடையில் உருவாக்கிய Gmail
❌ அதன் Password கூட தெரியாமல் போனை பயன்படுத்துகிறார்கள்
📌 இன்று செய்ய வேண்டியது:
• உங்கள் Gmail / iCloud email
• அதற்கான Password
👉 உங்களுக்கு நினைவில் உள்ளதா என சரிபாருங்கள்
👉 இல்லையெனில் பாதுகாப்பாக எழுதிவையுங்கள்
📍 மொபைலை Track செய்ய ஒரே வழி இதுதான்.

3️⃣ Find My Device / Find My iPhone ON செய்து வைத்திருங்கள்
🔹 Android – Find My Device
🔹 Apple – Find My iPhone
🔹 Location Services – ON

➡️ மொபைலை:
✔️ Map மூலம் பார்க்க
✔️ Lock செய்ய
✔️ Data முழுவதும் அழிக்க (Wipe)

4️⃣ வலுவான பாதுகாப்பு முறையை பயன்படுத்துங்கள்

❌ Lock இல்லாமல் / Simple pattern = பெரிய ஆபத்து
✅ Strong Password / Pattern
✅ Fingerprint / Face ID

👉 திருடன் உடனே போனை திறந்து Data அழிப்பதை தடுக்கும்.

5️⃣ முடிந்தால் E-SIM பயன்படுத்துங்கள்
📌 Physical SIM எளிதில் எடுக்கலாம்
📌 E-SIM எடுக்க முடியாது
➡️ மொபைல் Internet-க்கு இணைந்தே இருக்கும்
➡️ கண்டுபிடிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்

6️⃣ Power OFF செய்ய Password அவசியமாக்குங்கள்

📌 Settings → Security
📌 Require password to power off – ON
➡️ திருடன் போனை OFF செய்ய முடியாது
➡️ Track செய்ய உங்களுக்கு அதிக நேரம் கிடைக்கும்
⚠️ கடைசியாக
மொபைல் தொலைந்த பிறகு வருத்தப்படுவதற்குப் பதிலாக
👉 முன்பே தயாராக இருப்பது
👉 உங்கள் தகவல்களையும் வாழ்க்கையையும் பாதுகாக்கும்.
விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இலங்கை பொலிஸ் பொது மக்களுக்கு வழங்கும் செய்தி
இந்த தகவலை உங்கள்
👨‍👩‍👧‍👦 குடும்பத்தினருக்கும்
👫 நண்பர்களுக்கும்
கண்டிப்பாக Share செய்யுங்கள் 🙏

கருத்துரையிடுக

0 கருத்துகள்