உங்கள் Gmail.com Username யை மாற்ற முடியும் உங்களுக்குத் தெரியுமா?
இத்தனை காலமும் நாம் ஒரு மின்னஞ்சல் முகவரியை (Email ID) உருவாக்கிய பிறகு, அதன் Username பகுதியை (அதாவது @gmail.com என்பதற்கு முன்னால் உள்ள பெயர்) மாற்ற முடியாது

என்ற ந
ிலை இருந்தது. ஆனால், தற்போது அந்தப் பிரச்சினைக்கு கூகுள் தீர்வு கண்டுள்ளது.

கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய வசதியின் மூலம், இப்போது உங்கள் பயனர் பெயரை (Username) மாற்றிக்கொள்ள முடியும்.

இதைப் பற்றிய முக்கிய தகவல்கள் இதோ:

தரவுகள் பாதுகாப்பு: நீங்கள் Username மாற்றினாலும், உங்கள் Google Drive கோப்புகள், Photos அல்லது ஏனைய தரவுகள் (Data) எதற்கும் பாதிப்பு ஏற்படாது. அவை அப்படியே பாதுகாப்பாக இருக்கும்.

பழைய மின்னஞ்சல் இணைப்பு: நீங்கள் புதிய பெயரை மாற்றும்போது, பழைய மின்னஞ்சல் முகவரியானது தானாகவே புதிய முகவரியுடன் இணைக்கப்படும் (Link). இதனால் பழைய முகவரிக்கு வரும் செய்திகளும் உங்களுக்குக் கிடைக்கும்.

கட்டுப்பாடுகள்: இந்தப் பெயரை அடிக்கடி மாற்ற முடியாது. ஒருமுறை மாற்றினால், மீண்டும் மாற்றுவதற்கு ஒரு வருடம் காத்திருக்க வேண்டும். அத்துடன், வாழ்நாளில் அதிகபட்சமாக மூன்று முறை மட்டுமே இவ்வாறு மாற்றிக்கொள்ள முடியும்.

இதை எவ்வாறு சரிபார்ப்பது?
தற்போது இந்த வசதி படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது (Gradually Rollout). குறிப்பாக இந்தியாவில் இது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
உங்களுக்கும் இந்த வசதி கிடைத்துள்ளதா என்று பார்க்க:
உங்கள் மின்னஞ்சல் கணக்கிற்குச் செல்லுங்கள்.
Personal Info பகுதிக்குச் செல்லுங்கள்.
அங்குள்ள Email Section இல் இதனைச் சரிபார்க்கலாம்.
உங்கள் கூகுள் கணக்கில் மின்னஞ்சல் பெயரை (Username) மாற்றும் வசதி கிடைத்துள்ளதா என்பதைச் சரிபார்த்து, அதனைச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் இதோ:

இடதுபுறம் அல்லது மேல் பகுதியில் உள்ள மெனுவில் "Personal info" (தனிப்பட்ட தகவல்) என்பதைத் தெரிவு செய்யுங்கள்.

கீழே நகர்த்தி (Scroll down), "Contact info" பிரிவில் உள்ள "Email" என்பதை அழுத்தவும்.

அங்கு "Google Account email" என்ற பகுதியைக் கிளிக் செய்யவும்.

இந்த வசதி உங்கள் கணக்கிற்கு வழங்கப்பட்டிருந்தால், அந்த மின்னஞ்சல் முகவரிக்கு அருகில் "Edit" (திருத்து) அல்லது ஒரு அம்புக்குறி (Arrow) அடையாளம் தோன்றும். அதனை அழுத்தி புதிய பெயரை உள்ளிடலாம்.
இந்த தகவல் ஏனையவர்களுக்கும் உதவ இந்த Post ஐ share செய்யுங்கள்
0 கருத்துகள்