வருமான வரி தினைக்களத்திலிருந்து உங்களுக்கு Red Notice வந்ததா?
இன்று பலருக்கும் Inland Revenue Department (IRD) லிருந்து “Red Notice”ன்னு ஒரு கடிதம் வர ஆரம்பித்துள்ளது. உண்மையில் அது என்ன? நம்மால் என்ன செய்யலாம்? எப்படி சரியாக handle பண்ணலாம்? அப்படின்னு ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
1. “Red Notice” என்றால் என்ன?
IRD ஊடாக நாம் ஒரு Taxpayer ஆக register ஆகியபின், ஒவ்வொரு வருடமும் நமக்கு சில tax தொடர்பான கடமைகள் இருக்கும்:
* Annual Income Tax Return submit பண்ணனும்
* சிலருக்கு நடப்பு வருடத்துக்கான Self-Estimated Tax (SET) declare பண்ணணும்
* Return file பண்ணிய பிறகு tax payable இருந்தா pay பண்ணணும்
இப்படி செய்ய வேண்டிய கடமைகள் நேரத்தில் செய்யாமல் இருந்தால்
“நீங்கள் இதை இதுவரைக்கும் செய்யவில்லை, தயவு செய்து இத்தேதிக்குள் செய்து முடிக்கவும். இல்லையெனில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்”
என்று இறுதி எச்சரிக்கை மாதிரி IRD அனுப்புற official warning letter தான் Red Notice.
2. ஏன் Red Notice வரும்?
கீழே கொடுத்திருக்கிற சில காரணங்களால்தான் பெரும்பாலும் notice வரும்:
* Income Tax Return file செய்யாமல் இருப்பது
* அந்த financial yearக்கான return due date முடிந்தும் இன்னும் submit பண்ணாமல் இருக்கும்போது.
* Self-Estimated Tax (SET) declare பண்ணாதது
* குறிப்பிட்ட வருமானத்திற்கும் மேல் earn பண்ணுற business / professionals கிட்ட நடப்பு வருடத்துக்கு estimate tax declare பண்ணணும். அதை online ல பண்ணாம இருந்தால் notice வரலாம்.
* Tax arrears / balance tax செலுத்தாதது
* Return file பண்ணியிருப்பார்கள், ஆனால் pay செய்ய வேண்டிய tax அல்லது installment pay ஆகாமல் pending இருக்கும்.
3. Red Notice வந்ததுடன் உடனே செய்ய வேண்டியவைகள்
✅ Step 1 – கடிதத்தை முழுமையாக வாசிக்கவும்
* Year of Assessment (உதா: 2022/23, 2023/24)
* காரணம்: Return submit பண்ணவில்லையா? Tax pay பண்ணவில்லையா? SET declare பண்ணவில்லையா?
* Noticeல mention பண்ணியிருக்கும் deadline (எந்த தேதிக்குள் rectify செய்யனும்னு)
இதெல்லாம் நன்றாக வாசித்துக் கொள்ளவும்.
✅ Step 2 – IRD Online Portal செக் பண்ணுங்கள்
* IRD website (e-services) ல login செய்து
* அந்த Year of Assessment க்கு நம்ம return already submit செய்துவிட்டோமா என்று check செய்து கொள்ளுங்கள்.
* Submit பண்ணாமல் இருந்தால்:
* சம்பளம் / freelance / business / rent / interest etc. எல்லாவற்றையும் கணக்கு போட்டு return file பண்ணுங்கள்.
* வருமானமில்லை என்றாலும், அதையுமே “Nil Return” ஆக submit பண்ணலாம்
✅ Step 3 – SET / Installment தொடர்பானது என்றால்
* Noticeல SET பற்றிதான் சொல்லி இருக்கின்றார்களா?
* அப்படி எனில் நடப்பு வருடத்துக்கான உங்களது estimated income & tax onlineல declare பண்ணணும்
* Tax arrears / balance tax பற்றின notice எனில்
* அந்த amount verify பண்ணுங்கள்
* முடிந்தவரை அதை ஒரேமுறை pay பண்ணுங்கள்
* முடியாவிடின் IRD officer கிட்ட போய் installment plan கேட்டு பேசலாம்
✅ Step 4 – “நான் already file பண்ணிவிட்டேன்?” என்று தோணுகின்றதா?
சில சமயம்:
* நம்ம return file பண்ணிருப்போம்
* ஆனால் சிஸ்டத்தில் properly update ஆகாம இருக்கலாம்
* அல்லது வேறு TIN, வேறு NIC mismatch ஆக இருக்கலாம்.
அப்படியானால்:
* Portal ல இருந்து return submitted proof (acknowledgement / screenshot) எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
* குறைந்தது ஒரு simple letter அல்லது email மூலம் IRD கிட்ட clear பண்ணிக்கலாம்.
* மிகவும் சந்தேகம் இருந்தா அருகிலுள்ள IRD branch இற்கு சென்று officer கிட்ட நேரடியாகச் சொல்லுங்கள்
4. Red Notice ஐ Ignoré பண்ணிட்டோனா என்ன ஆகும்?
இது தான் முக்கியமான புள்ளி.
Red Notice இற்கு இரு வாரங்களுக்குள் பதிலளிக்காவிடின் பல தண்டனைகளுக்கு உள்ளாக நேரிடும். உதாரணமாக Return file பண்ணாமல் இருந்தால் குறைந்தது 50,000 ரூபாய் தொடக்கம் 4 லட்சம் ரூபாய் வரை தண்டப் பணமாக அறவிடலாம்.
* Tax pay பண்ணாமல், Notice இற்கு reply குடுக்காம இருந்தால், IRD இடம் சட்ட ரீதியாக நிறைய powers இருக்கின்றன.
* Penalty + Interest add பண்ணுவார்கள்.
* உங்க bank info / property info pending taxக்கு link பண்ணி legal action initiate பண்ணலாம்
* பெரிய அளவிலான தவறுகளுக்கு court case, seizure போல விஷயங்களுக்கும் போகலாம்
மேலதிக தகவல்கள் மற்றும் உதவிகளுக்கு
அழையுங்கள்
மேலதிக தகவலுக்கு
0755905278
0 கருத்துகள்