1000 Digital General Knowledge (801-850)
கல்வி மற்றும் உளவியல் வினா - விடைகள்
801. ஒரு ஆசிரியர் வெளிநாடு செல்வதற்கு (சுற்றுலா) யாருடைய அனுமதி அவசியம்?
✅ விடையைக் காட்டுக
விடை: கல்வி அமைச்சின் செயலாளர் அல்லது மாகாணக் கல்விச் செயலாளர்.
802. பாடசாலையில் ”மாணவர் பாராளுமன்றம்” அமைப்பதற்கான வழிகாட்டலை வழங்கியது எது?
✅ விடையைக் காட்டுக
விடை: கல்வி அமைச்சு.
803. ஆசிரியர்கள் பயன்படுத்தும் "ஆசிரியர்வழிகாட்டி" (Teacher's Guide) யாரால் தயாரிக்கப்படுகிறது?
✅ விடையைக் காட்டுக
விடை: தேசிய கல்வி நிறுவகம் (NIE).
804. ஒரு ஆசிரியர் ஓய்வுபெற விரும்பினால் எத்தனை மாதங்களுக்கு முன்னர் அறிவிக்க வேண்டும்?
✅ விடையைக் காட்டுக
விடை: 3 மாதங்களுக்கு முன்னர்.
805. ”தற்காலிகமாகச் சேவையிலிருந்து நீக்கப்படுதல்" (Interdiction) எப்போது நிகழும்?
✅ விடையைக் காட்டுக
விடை: பாரிய ஒழுக்காற்று மீறல்கள் அல்லது நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைகள் நடக்கும் போது.
806. பாடசாலையில் "ஆவணக் காப்பகம்" (Archives) யாரால் நிர்வகிக்கப்படுகிறது?
✅ விடையைக் காட்டுக
விடை: பாடசாலை அதிபர் மற்றும் ஆவணங்களுக்குப் பொறுப்பான ஆசிரியர்.
807. ஆசிரியர் சேவைப் பிரமாணத்தின்படி ”சம்பள முரண்பாடுகளை” நீக்க 2022 இல் கொண்டுவரப்பட்ட புதிய சம்பளக் குறியீடு எது?
✅ விடையைக் காட்டுக
விடை: GE 1-2022.
808. ஆசிரியர்களின் ”வருடாந்த தரங்கணிப்பீட்டு அறிக்கை" (Appraisal Report) எதற்காகப் பயன்படுகிறது?
✅ விடையைக் காட்டுக
விடை: வருடாந்த சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வுகளைத் தீர்மானிக்க.
809. ”பாடசாலை மட்ட கணிப்பீடு" (SBA) பதிவேடுகளை எத்தனை ஆண்டுகள் பாதுகாக்க வேண்டும்?
✅ விடையைக் காட்டுக
விடை: பொதுவாக மாணவர் பாடசாலையை விட்டு விலகும் வரை.
810. ஆசிரியர்களுக்கான ”சீருடை” (Dress Code) தொடர்பான வழிகாட்டல்கள் யாரால் வழங்கப்படுகின்றன?
✅ விடையைக் காட்டுக
விடை: கல்வி அமைச்சு மற்றும் பொது நிர்வாக அமைச்சின் சுற்றுநிருபங்கள்.
811. பாடசாலையில் ”புகைபிடித்தல் மற்றும் மது" தடைசெய்யப்பட்டிருப்பது எந்தச் சட்டத்தின் கீழ் வருகிறது?
✅ விடையைக் காட்டுக
விடை: புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகாரசபைச் சட்டம்.
812. கல்வி உளவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
✅ விடையைக் காட்டுக
விடை: எட்வர்ட் லீ தோண்டைக்.
813. "அறிவுசார் வளர்ச்சி” நிலைகளை நான்காகப் பிரித்தவர் யார்?
✅ விடையைக் காட்டுக
விடை: ஜோன் பியாஜே.
814. "ஆக்கபூர்வமான கற்றல்” (Constructivism) கொள்கையின் அடிப்படை யாது?
✅ விடையைக் காட்டுக
விடை: மாணவர்கள் தாமாகவே அனுபவங்கள் மூலம் அறிவைக் கட்டியெழுப்புதல்.
815. "முயன்று தவறிக்கற்றல்" (Trial and Error Learning) பரிசோதனையை மேற்கொண்டவர்?
✅ விடையைக் காட்டுக
விடை: தோண்டைக்.
816. "சமூகக் கற்றல் கோட்பாட்டை” (Social Learning Theory) முன்வைத்தவர்?
✅ விடையைக் காட்டுக
விடை: ஆல்பர்ட் பாண்டுரா.
817. "இயக்கநிலை நிபந்தனை” (Operant Conditioning) எதனை வலியுறுத்துகிறது?
✅ விடையைக் காட்டுக
விடை: வலுவூட்டல் (Reinforcement) மூலம் நடத்தையை மாற்றுதல்.
818. மாணவர்களின் ”நுண்ணறிவு ஈவு" (IQ) கணக்கிடும் சூத்திரம் என்ன?
✅ விடையைக் காட்டுக
விடை: IQ = (MA/CA) x 100.
819. "பல்லறிவுத் தத்துவத்தை" (Multiple Intelligences) அறிமுகப்படுத்தியவர் யார்?
✅ விடையைக் காட்டுக
விடை: ஹோவர்ட் கார்ட்னர்.
820. குழந்தை வளர்ச்சியில் "Zone of Proximal Development" (ZPD) எதனைக் குறிக்கும்?
✅ விடையைக் காட்டுக
விடை: உதவியுடன் செய்யக்கூடிய மற்றும் சுயமாகச் செய்யக்கூடிய மட்டத்திற்கு இடையிலான இடைவெளி.
821. ஆசிரியர்கள் பயன்படுத்தும் ”வலுவூட்டிகள்” (Reinforcers) எத்தனை வகைப்படும்?
✅ விடையைக் காட்டுக
விடை: இரண்டு (நேர்மறை மற்றும் எதிர்மறை வலுவூட்டிகள்).
822. "Maslow-வின் தேவைகளின் படிநிலை" கோட்பாட்டில் மிக அடிப்படையான தேவை எது?
✅ விடையைக் காட்டுக
விடை: உடல்சார் தேவைகள்.
823. மாணவர்களிடையே ”ஆக்கத்திறனை” (Creativity) வளர்க்க ஆசிரியர் பயன்படுத்தும் ஒரு உத்தி?
✅ விடையைக் காட்டுக
விடை: மூளைக்கிளர்ச்சி (Brainstorming).
824. ”உட்காட்சிக்கற்றல்" (Insight Learning) கோட்பாட்டை முன்வைத்தவர்கள் யார்?
✅ விடையைக் காட்டுக
விடை: கெஸ்டால்ட் (Gestalt) உளவியலாளர்கள்.
825. "மனவெழுச்சி அறிவு" (Emotional Intelligence) எனும் கருத்தை உலகப் புகழச் செய்தவர்?
✅ விடையைக் காட்டுக
விடை: டேனியல் கோல்மேன்.
826. மாணவர்களின் ”கவனத்தை" ஈர்ப்பதற்கான மிகச்சிறந்த வழி யாது?
✅ விடையைக் காட்டுக
விடை: பல்புலன் கற்றல் கருவிகளைப் பயன்படுத்துதல்.
827. "மறதி" (Forgetting) ஏற்படுவதற்கான ஒரு பிரதான காரணம்?
✅ விடையைக் காட்டுக
விடை: குறுக்கீடு அல்லது பயன்படுத்தாமை.
828. "கற்றல் மாற்றம்" (Transfer of Learning) என்பது என்ன?
✅ விடையைக் காட்டுக
விடை: ஒரு சூழலில் கற்ற விடயம் மற்றொரு சூழலில் பயன்படுதல்.
829. வகுப்பறையில் ”தண்டனை” வழங்குவதை விட உளவியலாளர்கள் எதனைப் பரிந்துரைக்கின்றனர்?
✅ விடையைக் காட்டுக
விடை: நற்பண்புகளைப் பாராட்டுதல்.
830. கல்வியில் ”வழிகாட்டலும் உளவளத்துணையும்" ஏன் அவசியம்?
✅ விடையைக் காட்டுக
விடை: மாணவர்களின் ஆளுமையை வளர்க்கவும் பிரச்சினைகளைத் தீர்க்கவும்.
831. "கற்றல் குறைபாடு" (Dyslexia) எதனோடு தொடர்புடையது?
✅ விடையைக் காட்டுக
விடை: வாசிப்பதில் உள்ள சிரமம்.
832. "Dyscalculia" எவ்வகையான குறைபாடு?
✅ விடையைக் காட்டுக
விடை: கணிதக் கணக்கீடுகளில் உள்ள சிரமம்.
833. ஆசிரியர் மையக் கற்பித்தலுக்கும் மாணவர் மையக் கற்பித்தலுக்கும் உள்ள வேறுபாடு?
✅ விடையைக் காட்டுக
விடை: மாணவர் மையத்தில் ஆசிரியர் ஒரு வழிகாட்டியாக (Facilitator) செயல்படுவார்.
834. "Bloom-வின் வகைப்பாட்டில்" உயர்ந்த நிலைச் சிந்தனை எது?
✅ விடையைக் காட்டுக
விடை: உருவாக்குதல் (Creating).
835. ”நுண்நிலைகற்பித்தல்” (Micro-teaching) எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது?
✅ விடையைக் காட்டுக
விடை: ஆசிரியர்களின் கற்பித்தல் திறன்களை மேம்படுத்த.
836. வகுப்பறையில் ”குழுப்பணி" (Group Work) எதனைக் குறைக்கிறது?
✅ விடையைக் காட்டுக
விடை: தனிமைப்படுத்தப்படுவதைத் தடுத்து சமூகத் திறன்களை வளர்க்கிறது.
837. ”முன்னறிவு" (Previous Knowledge) சோதித்தல் ஏன் முக்கியம்?
✅ விடையைக் காட்டுக
விடை: புதிய பாடத்தைப் பழைய அறிவோடு இணைக்க.
838. ”பாடக்குறிப்பு” (Lesson Planning) இல் உள்ள படிநிலைகளை வகுத்தவர் யார்?
✅ விடையைக் காட்டுக
விடை: ஹெர்பார்ட்.
839. ”சுயவிவரப்பதிவேடு” (Cumulative Record) எதனை உள்ளடக்கியது?
✅ விடையைக் காட்டுக
விடை: மாணவரின் கல்வி, சுகாதாரம் மற்றும் நடத்தை பற்றிய முழுமையான விபரங்கள்.
840. ”செயற்திட்டக்கற்றல்” (Project Method) யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
✅ விடையைக் காட்டுக
விடை: வில்லியம் கில்பாட்ரிக்.
841. "மாறும் நடத்தையை” உற்றுநோக்குதல் மூலம் கற்கும் முறை எது?
✅ விடையைக் காட்டுக
விடை: அவதானிப்புக் கற்றல்.
842. "Introvert" (அகமுகி) மாணவர்களின் பண்பு யாது?
✅ விடையைக் காட்டுக
விடை: தனிமையை விரும்புதல் மற்றும் குறைவாகப் பேசுதல்.
843. "Extrovert" (புறமுகி) மாணவர்களின் பண்பு யாது?
✅ விடையைக் காட்டுக
விடை: சமூகத்தோடு பழகுதல் மற்றும் தலைமைத்துவப் பண்பு.
844. ”தற்கருத்து” (Self-concept) என்பது என்ன?
✅ விடையைக் காட்டுக
விடை: ஒரு மாணவன் தன்னைப்பற்றித் தானே கொண்டுள்ள எண்ணம்.
845. வகுப்பறையில் ”நேர்மறைச் சூழல்" எவ்வாறு உருவாக்கப்படும்?
✅ விடையைக் காட்டுக
விடை: ஆசிரியரின் புன்னகை மற்றும் பாகுபாடற்ற நடத்தை மூலம்.
846. ”கற்றல்வளைவு” (Learning Curve) எதனைக் காட்டுகிறது?
✅ விடையைக் காட்டுக
விடை: காலத்திற்கும் கற்றல் முன்னேற்றத்திற்கும் இடையிலான தொடர்பு.
847. "Reward vs Incentive" - வித்தியாசம் என்ன?
✅ விடையைக் காட்டுக
விடை: Reward செயல் முடிந்த பின் கிடைப்பது. Incentive செயலைத் தூண்டுவதற்காக முன்பே அறிவிக்கப்படுவது.
848. "Halo Effect" என்பது மதிப்பீட்டில் எதனைக் குறிக்கும்?
✅ விடையைக் காட்டுக
விடை: ஒரு மாணவரின் ஒரு நல்ல பண்பைக் கண்டு அவரின் ஏனைய தவறுகளை ஆசிரியர் கவனிக்கத் தவறுதல்.
849. "Pygmalion Effect" என்பது என்ன?
✅ விடையைக் காட்டுக
விடை: ஆசிரியர் ஒரு மாணவர் மீது வைக்கும் அதிகப்படியான எதிர்பார்ப்பு அவரின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தல்.
850. "Motivation" (ஊக்கமூட்டல்) எத்தனை வகைப்படும்?
✅ விடையைக் காட்டுக
விடை: இரண்டு (அக ஊக்கம் மற்றும் புற ஊக்கம்).
0 கருத்துகள்