கல்வி நவீனமயமாக்கல் & கொள்கைகள்
பகுதி 01: கல்வி நவீனமயமாக்கல் (2010-2026)
1. 13 வருட கட்டாயக் கல்வித் திட்டம் எந்த ஆண்டு அறிமுகமானது?
விடை: 2017 (உயர்தரத்தில் தொழிற்கல்வித் துறையை அறிமுகப்படுத்துதல்).
2. "அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" திட்டம் ஆரம்பித்த ஆண்டு?
விடை: 2016.
3. தரம் 1 - 12 வரை அறிமுகமாகவுள்ள புதிய மதிப்பீட்டு முறை எது?
விடை: தொடர்ச்சியான மதிப்பீடு (Continuous Assessment) மற்றும் இறுதிப் பரீட்சை இணைந்த முறை.
4. STEM கல்வியில் இலங்கையின் புதிய இலக்கு யாது?
விடை: விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதப் பாடங்களை ஒருங்கிணைத்தல்.
5. தேசிய கல்வி ஆணைக்குழு கடைசியாகப் பரிந்துரைத்த ஆவணம் எது?
விடை: National Education Policy Framework (2023-2033).
6. மஹிந்தோதய தொழில்நுட்ப பீடங்கள் எத்தனை பாடசாலைகளில் உள்ளன?
விடை: சுமார் 1000 பாடசாலைகளில்.
7. "டிஜிட்டல் கற்றல்" முறைமையை ஊக்குவிக்க அறிமுகமான தளம் எது?
விடை: e-Thaksalawa.
8. உயர்தரத்தில் "தொழில்நுட்பப் பாடத்துறை" அறிமுகமான ஆண்டு?
விடை: 2013.
9. வட்டி இல்லா மாணவர் கடன் திட்டம் எந்த ஆண்டு முதல் அமலில் உள்ளது?
விடை: 2017.
10. "Smart Classroom" திட்டம் பரவலாக முன்னெடுக்கப்பட்டது எப்போது?
விடை: 2018/2019.
பகுதி 02: கல்வி நிறுவனங்கள் மற்றும் பணிகள்
13. தேசிய கல்வி நிறுவனம் (NIE) அமைந்துள்ள இடம் எது?
விடை: மகரகம.
14. பாடப் புத்தகங்களை அச்சிட்டு விநியோகிக்கும் பொறுப்பு யாருடையது?
விடை: கல்வி வெளியீட்டுத் திணைக்களம் (Educational Publications Department).
15. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) எந்தச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது?
விடை: 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்கப் பல்கலைக்கழகச் சட்டம்.
16. ஆசிரியர் கலாசாலைகளின் (Teachers' Colleges) பிரதான பணி யாது?
விடை: பயிற்சியற்ற ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தல்.
17. தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு (NCoE) மாணவர்களைத் தெரிவு செய்யும் அடிப்படைத் தகைமை?
விடை: க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறு.
18. பரீட்சைகளை நடாத்துவதற்கும் பெறுபேறுகளை வெளியிடவும் பொறுப்பான நிறுவனம்?
விடை: இலங்கை பரீட்சைத் திணைக்களம் (NETS).
19. TVEC என்பதன் விரிவாக்கம் என்ன?
விடை: Tertiary and Vocational Education Commission.
20. NVQ முறைமையில் எத்தனை நிலைகள் (Levels) உள்ளன?
விடை: 7 நிலைகள்.
பகுதி 03: கல்வி உளவியல் & கற்பித்தல்
21. ”மாணவர் மையக் கற்றலில்” ஆசிரியரின் பங்கு என்ன?
விடை: வசதியளிப்பவர் (Facilitator).
22. நவீன கற்றல் முறையில் 5E மாதிரி எவற்றைக் குறிக்கிறது?
விடை: Engage, Explore, Explain, Elaborate, Evaluate.
23. குழந்தையின் ஆளுமை வளர்ச்சியில் அதிக செல்வாக்கு செலுத்துவது எது?
விடை: பரம்பரை மற்றும் சூழல் (Nature and Nurture).
24. பரிசுகள் மற்றும் தண்டனைகள் எவ்வகை ஊக்கத்தைச் சார்ந்தவை?
விடை: புற ஊக்கம் (Extrinsic Motivation).
25. விசேட தேவையுடையோரைச் சாதாரண மாணவருடன் இணைக்கும் முறை?
விடை: உள்ளடக்கல் கல்வி (Inclusive Education).
பகுதி 04: புள்ளிவிவரங்கள் & பொது அறிவு
26. இலங்கையின் தற்போதைய எழுத்தறிவு வீதம் (Literacy Rate)?
விடை: தோராயமாக 92%.
27. இலங்கையில் உள்ள மொத்த அரசாங்க பாடசாலைகளின் எண்ணிக்கை?
விடை: 10,047 (2025 தரவு).
28. ஆசிரியர்-மாணவர் விகிதாசாரம் (Primary) என்ன?
விடை: 1:25.
29. இலங்கையில் உள்ள தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை?
விடை: 396.
30. இலங்கையின் தற்போதைய அரசியலமைப்பு அறிமுகமான ஆண்டு?
விடை: 1978.
31. அரசியலமைப்பின் 13வது திருத்தம் எதனோடு தொடர்புடையது?
விடை: மாகாண சபைகளை நிறுவுதல் மற்றும் அதிகாரப் பகிர்வு.
32. 21வது அரசியலமைப்பு திருத்தத்தின் முக்கிய நோக்கம்?
விடை: ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து, சுயாதீன ஆணைக்குழுக்களைப் பலப்படுத்துதல்.
33. இலங்கையின் மிக நீண்ட ஆறு எது?
விடை: மகாவலி கங்கை (335 கி.மீ).
34. தென்மேற்குப் பருவக்காற்று நிலவும் காலப்பகுதி?
விடை: மே முதல் செப்டம்பர் வரை.
பகுதி 05: சட்டங்கள் & சீர்திருத்தங்கள்
36. ”கட்டாயக் கல்வி வயது” 5-16 ஆக உயர்த்தப்பட்ட ஆண்டு?
விடை: 2016.
37. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் எதிர்பார்க்கப்படும் மாற்றம்?
விடை: போட்டித்தன்மையைக் குறைத்து, அடிப்படைத் தகைமைப் பரீட்சையாக மாற்றுதல்.
38. 1939 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்கக் கல்விச் சட்டத்தின் நோக்கம்?
விடை: இலவசக் கல்விக்கான சட்ட ரீதியான அடித்தளத்தை இடுதல்.
39. 1000 இடைநிலை பாடசாலைகள் திட்டத்தின் நோக்கம்?
விடை: கிராமப்புற பாடசாலைகளில் தரமான விஞ்ஞான மற்றும் தொழிநுட்பக் கல்வியை வழங்குதல்.
40. ”தேசிய கல்வி கல்வி ஆணைக்குழு" (NEC) நிறுவப்பட்ட ஆண்டு?
விடை: 1991.
41. சாதாரண தரப் பரீட்சையை எந்தத் தரத்தில் நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ளது?
விடை: தரம் 10 இல்.
42. ”பாடசாலை மட்டக் கணிப்பீடு" (SBA) அறிமுகமான ஆண்டு?
விடை: 1998 (2010 இல் நவீனப்படுத்தப்பட்டது).
43. இலங்கையின் கல்வி நவீனமயமாக்கல் செயற்திட்டம் எதனை முதன்மையாகக் கொண்டது?
விடை: டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் திறன் அடிப்படையிலான கல்வி (Competency-based).
44. இலவசப் பாடநூல் வழங்கும் திட்டம் ஆரம்பித்த ஆண்டு?
விடை: 1980.
45. இலவச சீருடை வழங்கும் திட்டம் ஆரம்பித்த ஆண்டு?
விடை: 1993.
46. "E-Nanasa" கல்வித் தொலைக்காட்சி யாரோடு இணைந்து செயல்படுகிறது?
விடை: Dialog Axiata மற்றும் கல்வி அமைச்சு.
47. உயர்தரத் தொழில்நுட்பத் துறையில் உள்ள 3 பாடங்கள்?
விடை: பொறியியல், உயிரியல் முறைமைகள், தொழில்நுட்பவியலுக்கான விஞ்ஞானம்.
48. ICT Hubs வழங்கும் திட்டம் பலப்படுத்தப்பட்ட ஆண்டு?
விடை: 2014-2015.
49. ஆசிரிய வழிகாட்டி (Teachers' Guide) நூல்களை வெளியிடுபவர்?
விடை: தேசிய கல்வி நிறுவகம் (NIE).
50. "Cloud-based Learning" இலங்கையில் பரவலான காலம்?
விடை: 2020 (COVID-19 காலப்பகுதி).
0 கருத்துகள்