இலங்கை கல்வித் துறை
வினா - விடை (2024-2027)
வினா - விடை (2024-2027)
101. முன்பள்ளிக் கல்வியைத் தரப்படுத்துவதற்கான புதிய சட்டமூலம் கொண்டுவரப்பட்ட ஆண்டு?
விடை: 2024
102. “அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" திட்டத்தின் நோக்கம்?
விடை: 2016-2019 காலப்பகுதியில் பாடசாலைகளின் பௌதீக வளங்களை மேம்படுத்துதல்.
சீர்திருத்தங்கள் & நிர்வாகம்
102. NEPF (2023-2033) தேசிய கல்விக் கொள்கை கட்டமைப்பின் நோக்கம்?
விடை: 2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை ஒரு முன்னேறிய நாடாக மாற்றும் நோக்கு.
103. 2016 திருத்தப்பட்ட கட்டாயக் கல்விச் சட்டத்தின்படி வயது எல்லை?
விடை: 5 முதல் 16 வயதுவரை.
104. "13 வருட உறுதிப்படுத்தப்பட்ட கல்வி" திட்டத்தின் சிறப்பு?
விடை: (சா/த) சித்தியடையாத மாணவர்களும் உயர்தரத்தில் தொழில்நுட்பப் பாடங்களைக் கற்க வழிசெய்தல்.
105. தற்போதைய ஆசிரியர் சேவைப் பிரமாணக்குறிப்பு வர்த்தமானி?
விடை: 2014.10.23 அன்று வெளியிடப்பட்ட 1885/38 இலக்க அதிவிசேட வர்த்தமானி.
106. Type-III பாடசாலைகள் என்றால் என்ன?
விடை: தரம் 1 - 5 வரை அல்லது தரம் 1 - 8 வரையான வகுப்புகளை கொண்ட பாடசாலை.
107. ஆங்கிலக் கல்வியை வலுப்படுத்த 2024 இல் மீள அறிமுகமான திட்டம்?
விடை: "English as a Life Skill" திட்டம்.
108. பாலர் கல்வி தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள ஆண்டு?
விடை: 2027 (பாடத்திட்டக் கட்டமைப்பு - 2025).
109. தேசிய கற்றல் மேலாண்மை தளத்தின் (LMS) பெயர்?
விடை: E-Thaksalawa (ஆரம்பம்: 2012).
110. ESDP என்பதன் விரிவாக்கம்?
விடை: Education Sector Development Program (கல்வித்துறை அபிவிருத்தி வேலைத்திட்டம்).
113. டெப்லெட் கணினி வழங்கும் ”நெனோ” திட்டம் எப்போது ஆரம்பமானது?
விடை: 2019/20 காலப்பகுதியில்.
114. இணைய வழியில் பெறுபேற்றுச் சான்றிதழ் (e-Certificate) சரிபார்க்கும் வசதி?
விடை: 2024 முதல்.
115. STEM - கல்வியியல் கல்லூரி பயிற்சிகள் எதனை வலுப்படுத்தின?
விடை: தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் பாடங்களை வலுப்படுத்த.
116. 2020 இல் Z-Score கணக்கீட்டில் சீர்திருத்தம் செய்யப்பட்ட நோக்கம்?
விடை: பழைய மற்றும் புதிய பாடத்திட்ட மாணவர்களுக்கிடையிலான பெறுபேற்றுச் சமநிலையைப் பேணுதல்.
117. 2010 இற்குப்பின் ஆரம்பிக்கப்பட்ட மருத்துவ பீடங்கள் எவை?
விடை: ரஜரட்ட, சப்ரகமுவ, மொறட்டுவ மற்றும் வயம்ப பல்கலைக்கழகங்கள்.
118. இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் (OUSL) பிராந்திய நிலையங்களின் எண்ணிக்கை?
விடை: 28 நிலையங்கள்.
119. NVQ Level 7 பட்டத் தகைமை உறுதிப்படுத்தப்பட்ட ஆண்டு?
விடை: 2013 முதல்.
120. "நகரப்பல்கலைக்கழக" (City University) மாதிரி முன்மொழியப்பட்ட ஆண்டு?
விடை: 2021.
121. தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அரசினால் அறிமுகப்படுத்தப்பட்ட கடன் திட்டம்?
விடை: வட்டி இல்லா மாணவர் கடன் திட்டம் (2017).
122. பாடசாலை மட்ட மேற்பார்வைக்காக வலுப்படுத்தப்பட்ட பதவி நிலை?
விடை: ஆசிரிய ஆலோசகர்கள் (ISA).
123. SBA (பாடசாலை மட்டக் கணிப்பீடு) மீளச் சீரமைக்கப்பட்ட ஆண்டு?
விடை: 2023.
124. பாடசாலைகளுக்குத் தன்னாதிக்க அதிகாரங்களை வழங்கும் முறைமை?
விடை: SBM (School Based Management).
126. ஒரு ஆசிரியருக்கு வருடத்தில் அனுமதிக்கப்படும் மொத்த விடுமுறைகள்?
விடை: 41 விடுமுறைகள் (21 சமயோசிதம், 20 மருத்துவம்).
127. பதவி உயர்வு பெறத் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயப் பரீட்சை?
விடை: வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சை (Efficiency Bar).
128. CPD (தொடர்ச்சியான வாண்மை விருத்தி) என்பதன் பொருள்?
விடை: ஆசிரியர்கள் சேவைக் காலத்தில் தொடர்ச்சியாகப் பயிற்சிகளைப் பெறுவதை உறுதிப்படுத்தல்.
129. 1AB மற்றும் 1C பாடசாலைகளுக்கு இடையிலான வேறுபாடு?
விடை: 1AB: கணித, விஞ்ஞான, கலை, வர்த்தகம் + தொழில்நுட்பம். 1C: கலை, வர்த்தகத் துறைகள் மட்டும்.
130. கொவிட் கால கற்றல் இடைவெளியை நிரப்ப நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டம்?
விடை: "Catch-up Education" (கற்றல் இழப்பு ஈடுசெய்தல்) திட்டம்.
ஆசிரியர் கல்வி & நிர்வாகம்
131. NCoE ஆசிரிய பயிலுனர்களுக்கான கொடுப்பனவு எப்போது அதிகரிக்கப்பட்டது?
விடை: 2024 ஆம் ஆண்டில்.
132. தரம் 3-I(a) இலிருந்து தரம் 2-II இற்கு பதவி உயர்வு தகைமை?
விடை: 3 வருட சேவைக்காலம் + EB பரீட்சை சித்தி (அல்லது PGDE பூர்த்தி செய்தல்).
134. கஷ்டப் பிரதேசத்தில் ஆகக்குறைந்தது எத்தனை வருடங்கள் சேவை செய்ய வேண்டும்?
விடை: 3 வருடங்கள்.
135. ஆசிரியர் நியமனம், இடமாற்றம் கையாளும் உயர்மட்ட அமைப்பு?
விடை: கல்விச் சேவை ஆணைக்குழு.
136. முதலாம் நியமன ஆண்டில் சமயோசித விடுமுறையை எவ்வாறு பெறலாம்?
விடை: எஞ்சிய காலத்திற்கு விகிதாசார அடிப்படையில்.
137. EB பரீட்சையில் எத்தனையாவது ஆண்டிற்குள் சித்தியடைய வேண்டும்?
விடை: நியமனம் பெற்று 3 வருடங்களுக்குள்.
138. 2030 ஆம் ஆண்டிற்கான சர்வதேச கல்வி இலக்கு எது?
விடை: நிலையான அபிவிருத்தி இலக்கு 4 (SDG 4).
139. சர்வதேச கல்வித் தர ஒப்பிட்டுப் பரீட்சை முன்னோடித் திட்டம் (2024)?
விடை: PISA Assessment.
141. கிராமப்புற பாடசாலை டிஜிட்டல் திட்டம் எது?
விடை: நெனச (Nenasa) Smart School.
143. 2025 இல் அறிமுகப்படுத்தப்படவுள்ள STEAM என்பதன் பொருள்?
விடை: Science, Technology, Engineering, Arts, Math.
144. சிறுவர் துஷ்பிரயோகத் தடுப்பு அவசர அழைப்பு இலக்கம்?
விடை: 1929.
145. பாடசாலை நிதி மற்றும் பௌதீக அபிவிருத்தியை நிர்வகிக்கும் அமைப்பு?
விடை: பாடசாலை அபிவிருத்திச் சங்கம் (SDS).
147. 2024-2026 திட்டத்தின் கீழ் பல்கலைக்கழகங்களில் உருவாக்கப்பட்ட புதிய பீடங்கள்?
விடை: செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தரவு விஞ்ஞானம் (Data Science) பீடங்கள்.
148. NVQ தகைமை கொண்டவர்கள் பல்கலைக்கழகங்களில் நேரடியாக இணைய வாய்ப்பு?
விடை: 2023 முதல் (Lateral Entry).
149. கலைத்திட்டத்தை வகுப்பறையில் நடைமுறைப்படுத்த NIE வெளியிடும் கையேடு?
விடை: ஆசிரியர் வழிகாட்டி (Teacher's Guide).
150. 2025 முதல் கால அட்டவணையில் எவற்றுக்காக விசேட நேர ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது?
விடை: விளையாட்டு மற்றும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகள்.
© கல்வி மேலாண்மை வழிகாட்டி
0 கருத்துகள்