பாடசாலை மாணவர்களுக்குக் காலணிகள் வழங்கும் இலவச வவுச்சர்.
05. தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு, பிரிவெனாக்களிலுள்ள பௌத்த துறவு மாணவர்களுக்கான -2025 மாணவர்கள் மற்றும் ஏனைய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
பாடசாலை பாதணி வழங்கும் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலைப் பாதணி வழங்கும் வேலைத்திட்டம் கல்வி அமைச்சின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், 2020 ஆம் ஆண்டு தொடக்கம் 2023 ஆம் வரைக்கும் தெரிவுசெய்யப்பட்டுள்ள பிரிவெனாக்களிலுள்ள பௌத்த துறவு மாணவர்கள் மற்றும் ஏனைய மாணவர்களும் குறித்த வேலைத்திட்டத்தில் உட்சேர்க்கப்பட்டுள்ளனர்.
2025 ஆம் ஆண்டுக்கான குறித்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் குழுவின் விதந்துரைக்கமைய கீழ்வரும் பாடசாலை மாணவர்கள், பௌத்த துறவு மாணவர்கள் மற்றும் ஏனைய மாணவர்களுக்குப் பாதணிகளைக் கொள்வனவு செய்வதற்கான 3,000/- ரூபா வவுச்சர் ஒன்றை வழங்குவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
• 250 மாணவர் தொகைக்குக் குறைவான பாடசாலைகளில் கல்வி பயிலும் 650,000
• 250 மாணவர் தொகைக்குக் குறைவான பாடசாலை வகையைச் சாராத நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள தோட்டப்பாடசாலை மாணவர்கள் 140,000 பேருக்கும்
• விசேட தேவையுள்ள மாணவர்கள் கல்வி பயில்கின்ற 28 பாடசாலைகளிலுள்ள 2300 மாணவர்களுக்கும்
• பிரிவெனாக்களில் கல்வி பயில்கின்ற 30,000 பௌத்த துறவு மாணவர்கள் மற்றும் ஏனைய மாணவர்களுக்கும்
06. பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்காக அரச போசாக்கு வேலைத்திட்டத்தை 2025 இல் நடைமுறைப்படுத்தல்
தற்போது 1-5 வரையான வகுப்புக்களில் மாணவர்கள் தொகை 100 இற்கும் குறைவான அனைத்து அரச பாடசாலைகளிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும், விசேட கல்விப் பிரிவு அல்லது விசேட கல்விப் பாடசாலைகளிலுள்ள மாணவர்கள் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட பிரிவெனாக்களிலுள்ள மாணவர்கள் உள்ளடங்கலாக 1.4 மில்லியன் மாணவர்களுக்கு நாடளாவிய ரீதியிலுள்ள 100 கல்வி வலயங்களில் 8,956 பாடசாலைகளில் "பாடசாலை உணவு வேலைத்திட்டம்” நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. குறித்த வேலைத்திட்டத்தை மேலும் திட்டமிட்ட வகையில் 2025 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தவும், ஆண்டுக்கான உயர்ந்தபட்சம் 1.5 மில்லியன் மாணவர்கள் பயனடையக்கூடிய வகையில் வரவு செலவுத்திட்டத்தில் நிதியொதுக்குவதற்கும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு மமைச்சரவை அங்கீகாரம்
வழங்கியுள்ளது.
0 கருத்துகள்