01. ஆசிரியர் செயலாற்றுகை தரங்கணிப்பு என்றால் என்ன?
1. ஆசிரியர்கள் தங்கள் சேவையின் போது செய்யும் கற்பித்தல் பணி, மாணவர்களின் முன்னேற்றம், பாடசாலைச் செயல்பாடுகளில் பங்கு, பணிநெறி மற்றும் ஒழுக்கம் போன்ற அம்சங்களை மதிப்பிடும் அதிகாரப்பூர்வ முறைமையே செயலாற்றுகை தரங்கணிப்பு (Performance Appraisal) ஆகும்.
02. இது எப்போது கட்டாயமாக்கப்பட்டது?
1. கல்வி அமைச்சு 2000/47, 2001/22, 2004/38, 2003/39, ED/04/40/2/01 போன்ற பல சுற்றறிக்கைகளின் மூலம் செயலாற்றுகை தரங்கணிப்பை அறிமுகப்படுத்தியது.ஆனால் 2006 ஆம் ஆண்டு முதல்,
2. ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்காக ஓய்வூதியம் வழங்குவதற்கும்
3. சம்பள உயர்வு பெறும் ஆசிரியர்களுக்காக வருடாந்திர சம்பள உயர்வுடன் தொடர்புபடுத்தியும் இச்செயல்முறை கட்டாயமாக்கப்பட்டது.
03. செயலாற்றுகை தரங்கணிப்பில் எதை மதிப்பிடுகின்றனர்?
1. கற்பித்தல் திறன் மற்றும் பாடப்பகுதி அறிவு.
2. மாணவர்களின் கல்விச் சிறப்பு மற்றும் முன்னேற்றம்.
3. பாடசாலைச் செயல்பாடுகளில் பங்கேற்பு
4. ஒழுக்கம், பணிநெறி, நேர்த்தி
04. செயலாற்றுகை தரங்கணிப்பு யார் மூலம் மேற்கொள்ளப்படுகிறது?
1. பாடசாலை அதிபர்.
2. சம்பந்தப்பட்ட வலயக் கல்வி அலுவலகம்
05. இது செய்யப்படவில்லை என்றால் என்ன ஆகும்?
1. சம்பள உயர்வு வழங்கப்படுவதில் தாமதம் ஏற்படும்.
2. பதவி உயர்வு பெறுவதில் சிக்கல்கள் தோன்றும்.
3. ஓய்வூதியம் பெறுவதில் இடையூறுகள் உருவாகும்.
06. ஆசிரியர்களுக்கு இதன் நன்மைகள் என்ன?
1. சம்பள உயர்வு மற்றும் ஓய்வூதியம் பெறுவதற்கான உரிமை உறுதிப்படுத்தப்படுகிறது.
2. தங்களது பணிச் சாதனைகளுக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் கிடைக்கிறது.
3. மேம்பாடு தேவைப்படும் துறைகளை ஆசிரியர் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.
07. ஆசிரியர்கள் தங்களது “சுயவிபரக் கோவை” (Professional File) பார்வையிட முடியுமா?
1. ஆம். ஒவ்வொரு ஆசிரியரும் தங்களது சுயவிபரக் கோவை (Professional File) பாடசாலை அதிபர் ஊடாக வருடத்திற்கு குறைந்தது ஒருமுறை முழுமையாகப் பார்வையிடும் உரிமை பெற்றுள்ளனர். இதன் மூலம் தங்களது செயலாற்றுகை மதிப்பீடுகள், குறிப்புகள் மற்றும் மேம்பாட்டுக்கான பரிந்துரைகள் குறித்து தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
0 கருத்துகள்