தரம் -6 பாடப்புத்தகத்தில் உள்ள இணைத்தளம் தொடர்பான விமர்சனம் என்ன?
6ஆம் தர பாட புத்தகத்தில், இனையத்தள நண்பர்கள் பற்றிய விளக்கத்தில் "ஓரின-சேர்க்கையாளர்கள்" தொடர்பான வலைத்தள முகவரி வழங்கப்பட்டுள்ளதாம்.. இதற்கு பலதரப்பட்ட விமர்சனங்கள் "இனம், கலாச்சாரம், மதம் " சார்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கு பின்னால் உள்ள காணரம் பற்றிய தரவுகளை யாரும் முன்வைத்ததாக தெரியவில்லை. இரண்டாம் உலகப்போருக்கு பின்னரான உலகமானது முற்று முழுதாக வணிகமயாக மாற ஆரம்பித்தது. எவ்வாறு எல்லாம் மக்களை செலவு செய்ய வைக்க முடியுமே அவ்வாறு எல்லாம் வணிகத்தை ஆரம்பித்தார்கள். இதற்கு ஏற்றது போல மக்கள் மன நிலையை மாற்றுவதற்கான திட்டங்களை அரசாங்கங்களே முன்னெடுத்தது, அரசாங்கம் முன்னெடுக்க முடியாத திட்டங்களை NGOக்களை உருவாக்கி, அவர்களுக்கு பணம் வழங்கி அவற்றை செய்ய வைத்தது.
உதாரணத்திற்கு - 2ம் உலக போருக்கு பின்னர் கஜானா காலியாகவிருந்த மேற்கத்தைய நாடுகள். மக்களிடம் உள்ள சேமிப்பை வெளியில் கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்ட விழிப்புணர்வு தான் " பெண் அடிமைத்தனம்" என்ற செயற்பாடு. பெண்களை செலவு செய்ய வைக்க வேண்டும் ஆணை போல போதைக்கு பழக்கப்படுத்தல் வீட்டை விட்டு வெளியே வா குடும்பம் என்பது அடிமைத்தனம் போன்ற சிந்தனையை வளர்த்து அதனூடாக பெண்களை வியாபார பொம்மைகளாக இந்த உலகம் மாற்றியது. அதன் வெற்றியாக, இன்றைய உலகில் 85வீதமான பொருட்களை வாங்குபவர்கள் பெண்களாக உள்ளனர். அதாவது உலகளவில் 20 ரில்லியன் வியாபரம், பெண்களை நம்பியே இயங்குகிறது. பெண்களை வியாபார அடிமையாக்குவதற்காக பல NGOக்கள் உருவாக்கப்பட்டது. அவர்கள் உருவாக்கிய தலைப்பு தான் "பெண்களுக்காக விடுதலை, பெண்ணியம்" என்பன. இந்த வியாபார அடிமைத்தனத்தை நமது நாடு இப்போது தான் அனுபவிக்க ஆரம்பித்துள்ளது. இதை ஏற்ற மேற்கத்தைய நாடுகளில் குடும்ப அமைப்பு என்பது முற்று முழுதாக சிதைந்து போனது.. இதனால் பல விளைவுகள் உருவாகியுள்ளது. விவாகரத்து, பெண் தலைமைத்துவ குடும்பம் , தாய் தந்தை ஆதரவற்ற பிள்ளைகள் என்பன இதனால் உருவான மிகப்பெரிய விளைவாகும். இது அரசிற்கு பெரும் சுமையாக மாறியுள்ளது.
மேற்கத்தைய நாடுகளில் பெண் தலைமைத்துவ குடும்பங்களின் செலவை ( single mom ) அரசே கொடுக்கவேண்டிய தேவை. அமெரிக்காவில் மாத்திரம் ஒரு வருடத்திற்கான குழந்தைகள் பராமரிப்பு செலவிற்காக 700 பில்லியன் டொலர் ஒதுக்கப்படுகிறது. ( இது இலங்கையின் 10 வருட மொத்த உற்பத்திக்கு சமமானது அல்லது 217,000,000,000,000 ரூபாய்கள் ) இவற்றில் இருந்து திசை திருப்புவும், அந்த அழிவுகளில் இருந்து அரசு பணம் செலவாகுவதையும் குறைக்க வேண்டும் என்று உருவாக்கப்பட்டது தான் "ஓரின-சேர்க்கை" எனும் திட்டம் இந்த திட்டத்தை 20 வருடங்களுக்கு மேலாக மேற்கத்தை அரசுக்கள் NGOக்கள் மூலமாக மக்கள் மத்தியில் விதைத்து வருகிறது. இலங்கையிலும் இவ்வாறான கைகூலி NGOக்கள் இருக்கிறது. ஒரின சேர்க்கை பற்றிய NGOக்கள் ஓரளவு வலிமையாக உருவான பின்னர், எமக்கான சட்டம் வேண்டும், உரிமை வேண்டும் என போராடும் பொழுது அதற்கு ஏற்று அரசு இயங்குவது போல மக்களுக்கு காட்டிக்கொள்வார்கள்.. ஓரின சேர்க்கை விளம்பரங்கள், திரைப்பட காட்சிகள் என முழுமையாக இந்த வர்த்தகத்தை ஊக்கிவிக்கும் கட்டுப்படாளர்கள் கைக்குள் இருக்கும். ஆண் பெண் திருமணத்தை அல்லது குடும்பமாக சேர்ந்து வாழ்ந்து பிள்ளைகளை பெற்றுக்கொள்வதை தடுப்பது தான் இதன் முக்கிய நோக்கம். இந்த திட்டமும் இன்று நேற்று வந்ததல்ல, இந்த மனநிலைக்கு மனிதர்களை மாற்றி அவர்களின் வாங்கு திறனையும் 3 ரில்லியன் டொலராக உயர்த்தி வைத்துள்ளது இந்த அரசுக்களும் வர்த்தக நிறுவனங்களும். 2025ம் ஆண்டில் இந்த ஒரின சேர்கையாளர்களின் சுற்றுலா சந்தை மதிப்பு மாத்திரம் 350 மில்லியன் டொலர்கள் என கூறப்படுகிறது. இது 2032இல் 600 பில்லியனாகும் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
ஓரின சேர்க்கையாளர்களை உருவாக்குவதற்கான & உருவாக்கியதன் காரணங்களை மேலோட்டமாக கூறியுள்ளேன். இது ஏன் இலங்கையிலும் உருவாக்கப்படுகிறது என பார்ப்போம். இலங்கை சுற்றுலாத்துறையில் மிகவும் முக்கியமான ஒரு நாடாக இருக்கிறது. சுற்றுலா பயணிகள் வரும் நாடுகளில் உலக அளவில் 50-60 இடத்திற்குள் இருக்கிறோம். தெற்காசியாவில் 2வது நாடாகவும் இருக்கிறோம். நாம் IMF இடம் சென்றபோது, எவ்வாறு எல்லாம் எமது வருமானத்தை அதிகரிப்போம் என ஒரு திட்டத்தை வழங்கியிருப்போம் அல்லவா ? அதில் மிக முக்கியமானது சுற்றுலாத்துறை அபிவிருத்தி. 2030ம் ஆண்டளவில் 4 மில்லியன் சுற்றுலா பயணிகளும், அதனுடாக 10 பில்லியன் டொலர் வருவாய் என்பது, இலங்கையின் இலக்கு என கூறியுள்ளோம். அந்த இலக்கை எவ்வாறு அடைவோம் என ஒரு திட்ட நகல் வழங்கியிருப்போமல்லவா ? அதில் நாம் "ஓரின-சேர்க்கையாளர்களின் 600 பில்லியன் சுற்றுலா வர்த்தகத்தை" கவர்வோம் என கூறியுள்ளோம்.. அதற்கு ஏற்ற சட்டங்கள், சாதகாமன உட்கட்டமைப்பு வசதிகள், மக்கள் மன நிலை மாற்றம் என அனைத்தையும் நாம் உருவாக்குவோம் என அரசு உறுதிமொழி கூறியே IMF கடனை பெற்று வருகிறது. அதற்கு அமைய நாம் செயற்படாமல் இருக்க முடியாது. அதற்கு ஏற்ற வகையில் அரசு சில வேலைகளை செய்கிறது, இந்த இடத்தில் அனுர தரப்பு மாத்திரமின்றி எவர் இருந்தாலும் இவற்றை செய்தாகவேண்டிய சூழலே காணப்படுகிறது. எனெனில் நாம் ஏற்றுக்கொண்ட கண்டிசன்கள் அவை.. #குறிப்பு - IMF தேவையில்லை, நாங்கள் வந்தால் அவற்றின் சரத்துக்களை மாற்றுவோம்/ அகற்றுவோம் என கூறிய அனுர தரப்பினர் அரசியல் விமர்சனங்களுக்கு உட்பட்டவர்களாக மாறியுள்ளனர். Vinoth Balachandran
0 கருத்துகள்