பின்லாந்து கல்வி முறைமைக்கும் இலங்கை கல்வி முறைமையக்கும் இடையிலான ஒப்பீட்டு ஆய்வு
#பின்லாந்தின் #கல்வி #முறைமையும் #இலங்கையின் #கல்வி #முறைமையும்-#ஒப்பீட்டு #ஆய்வு!.#மீள்
2017 ஆம் ஆண்டின் கல்வித் தரப்படுத்தலுக்கு அமைய, உலகின் தலைசிறந்த கல்வியை வழங்குவதில் முதலிடத்தில் சிங்கப்பூரும், இரண்டாம் இடத்தில் சுவிட்சர்லாந்தும், மூன்றாம் இடத்தில் பின்லாந்தும்,47 வது இடத்தில் இலங்கையும் உள்ளது.
பின்லாந்தின் கல்வி முறைமையுடன், இலங்கையின் கல்வி முறைமையை ஒப்பிட்டு ஆய்வு செய்யும் போது, பின்வரும் வேறுபாடுகளைக் காணலாம்.
1.#கல்விக்கான #முதலீடு/#ஒதுக்கீடு.
*பின்லாந்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6-7% ஐ கல்வித் துறையில் முதலீடு செய்வதால், சகல மாணவர்களுக்கும் உயர்தரமான கல்வியை வழங்கும். *ஆனால் இலங்கையில் உள்நாட்டு உற்பத்தியில் 1.5-1.9% ஐ மட்டுமே கல்வித் துறையில் முதலீடு செய்வதால், சகல மாணவர் களுக்கும் உயர் தரமான கல்வியை வழங்க முடிவதில்லை.
2.#கல்விக்கான #கட்டணம்.
*பின்லாந்தில் மாணவர்கள் குறித்த தொகை கல்விக் கட்டணத்தை செலுத்துவதன் மூலமே கல்வியைப் பெறலாம். நிதி ஒதுக்கீட்டில் பெருந்தொகை நிதி, கல்வி நிறுவனங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள பயன்படும். பாலர் வகுப்பு தொடக்கம் பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வியை வழங்கும் ஒரேயொரு ஆசிய நாடு இலங்கை .இதற்கு பொதுமக்களின் வரிப் பணமே செலவிடப்படுகிறது.அரசு ஒதுக்கீடு செய்யும் பெருந்தொகைப் பணம் சம்பளம் வழங்கவே பயன்படும்.
3.#பாடசாலை #முறைமை.
*பின்லாந்தில் அரசினால் ஒதுக்கீடு செய்யும் நிதியின் பெரும்பகுதி கல்விக் கட்டமைப்பை நவீனப் படுத்தப் பயன்படும். அத்தோடு சகல கல்வி நிறுவனங்களுக்கும் சமமான நவீன வசதிகள் வழங்கப்படும். மேலும் ஒரு பாடசாலையில் உச்சளவில் 600 மாணவர்களும், வகுப்பறை ஒன்றில் 20-26 மாணவர்களும் இருப்பர். சகல மாணவர்களுக்கும் கல்வியில் சமவாய்ப்பு வழங்கப்படும்.
*இலங்கையைப் பொறுத்தவரை தேசிய பாடசாலைக்கும், சிங்கள மொழி பாடசாலைகளுக்கும் அதிகளவு வளங்கள் பகிரப்பட்ட, மலையக,சேரிப்புற, அதி கஷ்டப் பிரதேச பாடசாலைகளுக்கு வளப்பற்றாக்குறை மிகவும் அதிகமாக இருக்கும். இதனால் நகர்ப்புற அதிவிருப்புக்குரிய பாடசாலைகளில் 2000 க்கு அதிகமான மாணவர்களும், விருப்பமான பாடசாலைகளில் 1000 க்கு அதிகமான மாணவர்களும், கஷ்டப் பிரதேச பாடசாலைகளில் குறைவான மாணவர்களும் அனுமதி பெறுகின்றனர். இதனால் சகல மாணவர்களுக்கும் சமமான கல்வி வழங்கப்படுவதில்லை. அதேவேளை நகர்ப்புற பாடசாலைகளில் வகுப்பறை ஒன்றில் 45-50 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.ஒரு பாடசாலையில்/வகுப்பறை ஒன்றில் அதிகமான மாணவர்கள் இருப்பதால், மாணவர்களின் தனியாள் வேறுபாடுகளுக்கு அமைய சகல மாணவர்களுக்கும் சமமான கல்வி கிடைப்பதில்லை.
4.#மாணவர்: #ஆசிரியர் #விகிதம்.
*பின்லாந்தில் மாணவர்: ஆசிரியர் விகிதம் 20-26:1 ஆகக் காணப்படும் அதேவேளை தரம் 1-6 வரை ஒரு ஆசிரியரிடமே மாணவர்கள் கற்கின்றனர்.இதனால் மாணவர் களின் பெற்றோர்களுடனான ஆசிரியரின் இடைவினை அதிகமாக இருப்பதால், பெற்றோர்களுடன் இணைந்து சகல மாணவர்களையும் தேர்ச்சி அடையச் செய்வர். *ஆனால் இலங்கையில் ஆரம்பப் பிரிவில் முதனிலை -1 இல் ஒரு ஆசிரியரிடமும், முதனிலை-2 இல் மற்றொரு ஆசிரியரிடமும், முதனிலை-3 இல் மற்றொரு ஆசிரியரிடமும் கல்வி கற்பதால், ஆரம்பப் பிரிவுக்கான தேர்ச்சி முழுவதையும் சில மாணவர்கள் அடைவதில்லை.மேலும் சிங்கள மொழி பாடசாலைகளில் மாணவர்; ஆசிரியர் விகிதம் 18-22:1 ஆகவும், தமிழ் மொழி பாடசாலைகளில் மாணவர் ஆசிரியர் விகிதம் 22-28:1 ஆகவும், கஷ்டப் பிரதேச பாடசாலைகளில் 30-38:1 ஆகவும் இருப்பதால் கல்வியில் சமவாய்ப்பு கிடைப்பதில்லை.
5.#கல்வியை #வழங்கும் #ஏகபோக #உரிமை.
*பின்லாந்திலுள்ள கல்வி நிறுவனங்களில் 98% வை அரசுக்கும், 2% வை தனியாருக்கும் சொந்தமானவை.சகல கல்வி நிறுவனங்களிலும் கல்விக் கட்டணத்தை செலுத்துவதன் மூலமே கல்வியைத் தொடர முடியும். அதேவேளை மிகக் குறைந்தளவில் பிரத்யேக வகுப்புகள் நடைபெறுகின்றன.
*இலங்கையைப் பொறுத்தவரை அரச பாடசாலைகள்,அரச உதவி பெறும் தனியார் பாடசாலைகள், தனியார் பாடசாலைகள், சர்வதேச தனியார் பாடசாலைகள் போன்றவை மூலம் கல்வி வழங்கப்படுகிறது. இதில் அரச பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகளில் கல்விக் கட்டணத்தை செலுத்துவதன் மூலமே கல்வியைத் தொடர முடியும். அரச பாடசாலைகளில் தரமான கல்வி கிடைக்காத நிலையில் 65-70% மாணவர்கள் பிரத்யேக வகுப்புகளில் கட்டணம் செலுத்தி கல்வி கற்கின்றனர்.
6.#பொதுப் #பரீட்சை.
*பின்லாந்தில் தரம் 1-6 வரை எந்தவொரு பரீட்சையும் நடத்துவதில்லை.எனினும் இடைநிலை வகுப்புகளில் பாடசாலை மட்டத்தில் பரீட்சையும்,செயலடைவுக்கோவை (Portfolio Assessment) எனும் தொடர் மதிப்பீடும் நடத்தப்படும். எனினும் மாணவர்களை பரீட்சைப் புள்ளி அடிப்படையில் Rank பண்ணுவதில்லை. அதேவேளை பல்கலைக்கழக அனுமதிக்காக மட்டும் தேசிய மெற்றிக்குலேசன் எனும் ஒரேயொரு பொதுப்பரீட்சை நடத்தப்படும்.
*இலங்கையைப் பொறுத்தவரை தரம் 1,2 வகுப்புகளில் பரீட்சை நடாத்துவதில்லை, எனினும் ஏனைய வகுப்புகளுக்கு பாடசாலை மட்டம்,கோட்ட மட்டம்,வலய மட்டத்தில் பரீட்சை நடத்தி, மாணவர்கள் Rank பண்ணப்படுவார்கள்.அதேவேளை தரம் 5, சா/த,உ/த வகுப்புகளில் பொதுப் பரீட்சை நடத்தப்படும். தேசிய பரீட்சைகளில் அதிக புள்ளிகளைப் பெற வேண்டும் என்பதற்காகவே அதிகளவு மாணவர்கள் பிரத்யேக வகுப்புகளில் கற்கின்றனர். இதனாலேயே பிரத்யேக வகுப்புக் கலாசார விருத்தியடைந்து வருகிறது. இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் மன அழுத்தங்களுக்கு உள்ளாக நேரிடும். எனினும் தற்போது புதிய கல்வி மறுசீரமைப்பைக்கு அமைய, தவணைப் பரீட்சையை இரத்துச் செய்து, தொடர் கணிப்பீடு மற்றும் புதிய மதிப்பீட்டு முறைமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தில் நடத்தப்படும் ஆசிரியர் கல்வியில் முதுகலைமாணி MATE கற்கைநெறி எந்தவொரு பரீட்சையும் இன்றி, Portfolio Assessment முறையில் மதிப்பீடு செய்து பட்டம் வழங்கப்படுகிறது.
7.#பாடசாலை #செல்லும் #வயது.
*பின்லாந்தில் 7 வயதைப் பூர்த்தி செய்த பின்னரே பாடசாலையில் தரம் 1 க்கான அனுமதி கிடைக்கும். ஏனெனில் பிள்ளைகள் பெற்றோர்களின் பராமரிப்பின் கீழ் வீடுகளில் வாழ்க்கைத் தேர்ச்சியை கற்று,சுயதிறனில் விருத்தி அடைய வேண்டும். அத்தோடு முன்பள்ளிகளும் இல்லை. *இலங்கையைப் பொறுத்தவரை 2 வயதைப் பூர்த்தி செய்தவுடன் பாலர் பாடசாலைக்கும்,5 வயதைப் பூர்த்தி செய்தவுடன் பாடசாலைக்கும் செல்கின்றனர். இதனால் பிள்ளைகளுக்கு இளவயதில் கிடைக்க வேண்டிய பெற்றோர்களின் அரவணைப்பு மற்றும் வீட்டில் கிடைக்க வேண்டிய வாழ்க்கை நெறிகள் எதுவும் கிடைக்காமல் போவதால், பிள்ளைகளிடம் சுய திறன் விருத்தியில் குறைபாடு ஏற்படும்.
8.#ஆசிரியர்களை #நியமித்தல்.
*பின்லாந்தில் ஆசிரியர் நியமனத்திற்கான அடிப்படைத்தகுதி கல்வியில் முதுமாணியாகும்.அத்தோடு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் 5 வருடகாலப் பயிற்சியுடன் தலைமைத்துவப் பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும். இலங்கையைப் பொறுத்தவரை சா/த, உ/த பரீட்சையில் சித்தி பெற்றவர்கள், மற்றும் அரசியல் சார்ந்த ஜனசக்தி ஆசிரியர், தொண்டர் ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் போன்ற நியமனங்களும்,மிகக் குறைந்த அளவில் தேசிய கல்வியியல் கல்லூரி ஆசிரியர் நியமனமும் வழங்கப்படுவதால், மாணவர்களுக்கு உயர் தரமான கல்வியை வழங்குவதில் இடர்பாடுகள் உள்ளன. குறிப்பாக பாட நிபுணத்துவம் வாய்ந்த ஆசிரியர் குறைவாக இருப்பதால் தான், குறித்த நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்களிடம் மாணவர்கள் பிரத்யேக வகுப்புகளுக்குச் சென்று கற்கின்றனர். 8.#வாண்மைத்துவத்தை
#தற்காலப் படுத்தல்.
*பின்லாந்தில் பாடசாலை விட்டபின், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்குச் சென்று, ஆசிரியர் வாண்மைத்துவத்தை இற்றைப்படுத்திக் கொள்வர். அத்தோடு பொறியிலாளர், மருத்துவர், சட்டத்தரணி ஆகியவற்றுக்கு இணையான முழு தொழில்வாண்மைத்துவம் மிக்கவர்களாக ஆசிரியர்கள் இருப்பதாலும், உயர் கல்வி மற்றும் தொழிற்றகைமையைக் கொண்டிருப்பதாலும் அதிக சம்பளத்தைப் பெறுகின்றனர்.
*இலங்கையைப் பொறுத்தவரை பாடசாலை நேரத்தில் மட்டும் ஆசிரியர் கடமையை செய்பவர்களாகவும், பாடசாலை மட்ட ஆசிரியர் தொழில் வாண்மைப் பயிற்சிகள், ஆசிரியர் மத்திய நிலையத்தின் வழங்கப்படும் வாண்மைத்துவப் பயிற்சிகள், வலயத்தால் நடத்தப்படும் பயிற்சிகள் போன்ற வற்றில் கலந்து கொள்ள மாட்டார்கள்.சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை காலங்களில் நடத்தப்படும் பயிற்சிகளிலும் கலந்து கொள்ள மாட்டார்கள். அதேபோல் ஆசிரியர் பயிற்சி/பட்டப் பின் கல்வி டிப்ளோமாவைப் பூர்த்தி செய்த பின்னர் தொழில் வாண்மைத்துவத்தை இற்றைப்படுத்த மாட்டார்கள். இப்படிப்பட்ட ஆசிரியர்களிடம் எப்படி தரமான கல்வியை வழங்க முடியும். இதனாலேயே குறைந்த சம்பளம் வழங்கப்படுகிறது. இலங்கையிலும் பின்லாந்தைப் போன்ற கல்வி முறைமையை அமுல் படுத்த....
1). அரசு உள்நாட்டு உற்பத்தியில் 6% நிதியை ஒதுக்கி, சகல பாடசாலை மற்றும் பல்கலைக்கழகங்களில் நவீன வசதிகள் மற்றும் நவீன வடிவமைப்பு செய்ய வேண்டும்.
2)சகல பெற்றோர்களும் கல்விக் கட்டணத்தைச் செலுத்தி கல்வியைப் பெற வேண்டும்.
3) சகல தனியார் கல்வி நிறுவனங்களையும் அரச உடமையாக்கி, சகல மாணவர்களுக்கும் இன,மத, மொழி பேதமின்றி சமமான கல்வி வழங்க வேண்டும்.
4) தேசிய கல்வியியல் கல்லூரிகளில் கல்விமாணிப்பட்டம் மற்றும் கல்வி முதுமாணிப்பட்டம் பெற்றவர்களுக்கு மட்டுமே ஆசிரியர் நியமனம் வழங்க வேண்டும்.தற்போது சேவையில் உள்ள ஆசிரியர்களில் 4-7% ஆசிரியர்கள் மட்டுமே கல்வி முதுமாணிப்பட்டத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
5) பட்டதாரிகளில் விருப்பியவர்களுக்கு தேசிய கல்வியியல் கல்லூரிகளில் பட்டப் பின் கல்வி டிப்ளோமா/கல்வி முதுமாணி பயிற்சி வழங்கி சித்தி பெற்றவர்களை ஆசிரியராக நியமிக்க வேண்டும். 5) ஆசிரியர்கள் அனைவரும் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை தொழில் வாண்மைப் பயிற்சி நெறியில் சேர்ந்து, பாடம் சார் நிபுணத்துவம் மற்றும் தொழில் தகைமைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
6) ஆசிரியர்களுக்கு அதியுயர் கௌரவத்தையும், உயர் சம்பளத்தையும் வழங்க வேண்டும்.
7) பரீட்சை மையக் கல்வி முறைக்குப் பதிலாக மாணவர்களின் அடைவை Portfolio Assessment மூலம் மதிப்பீடு செய்ய வேண்டும். பல்கலைக்கழக அனுமதிக்காக பரீட்சையுடன் Portfolio assessment அடிப்படையில் அனுமதிக்க வேண்டும். தொடரும்..
திரு.ந.சந்திரகுமார் SLPS, MEd(OUSL),
MA in Ed (Hons),MA in Philosophy (Hons)
MA in Psychology,MSc in Education Management, MPhil
மட்டக்களப்பு - களுதாவளை
0 கருத்துகள்