லீசிங் கட்டத் தவறினால் உரிய வாகனத்தைப் பறித்து செல்ல முடியுமா?
லீசிங் செலுத்த தவறினால் நிறுவனம் வாகனத்தை பறித்து செல்ல முடியுமா? Leasing தவணைக் கட்டணம் செலுத்தாத காரணத்திற்காக உங்களிடம் இருந்து குறித்த நிறுவனம் பலாத்காரமாக வாகனத்தை எடுத்துச் செல்ல முடியுமா...?
100% இல்லை! இது சட்டவிரோதம்...!
2025 வரை உள்ள புதிய சட்டங்கள், நீதிமன்ற தீர்ப்புகள்,
Central Bank விதிமுறைகள் உடன் முழுமையான விளக்கம் இதோ...!
Leasing நிறுவனம் தவணைக் கட்டணம் செலுத்தாத காரணத்திற்காக
குறித்த நபருடனான வாகன குத்தகை உடன்படிக்கையை இரத்து செய்யலாம்.
அந்த விடயத்தை குறித்த நபருக்கு அறிவித்து குறித்த வாகனத்தை
தங்களிடம் மீளக்கையளிக்குமாறு சட்டரீதியாக கோரலாம்.
அவ்வாறு குறித்த நபர் மீளளிக்க மறுத்தால் பொலிஸ் நிலையத்தில்
முறைப்பாடு செய்து பொலிஸ் உத்தியோகத்தருடன் சென்று வாகனத்தை மீளக் கையளிக்குமாறு கோரலாம்.
அதற்கும் மீளளிக்க மறுத்தால் மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல்
செய்து குறித்த வழக்கினூடாகவே வாகனத்தை மீளப்பெறலாம்.
இவ்வாறான எந்த சந்தர்ப்பத்திலும் சட்டவிரோதமான முறையில் அல்லது
பலவந்தமாக வாகனத்தை பறிமுதல் செய்ய முடியாது.
அதாவது இலங்கையில் “Forceful Repossession” என்ற கருத்தே சட்டபூர்வமாக
இல்லை!
2023–2025 காலப்பகுதியில் Central Bank வெளியிட்ட புதிய
Finance Business Act Directions, Motor Vehicle Leasing Directives, Borrowers’
Rights Protection Guidelines, மற்றும் High Court & Supreme Court தீர்ப்புகள்
அனைத்தும் மறுபடியும் தெளிவுபடுத்தியுள்ளன:
1. “Leased vehicles cannot be repossessed without a
valid court order.”
2. “Recovery agents have NO legal authority in Sri
Lanka.”
3. “Forceful repossession amounts to CRIMINAL
OFFENCE."
சட்டப்படி நிதி நிறுவனங்கள் என்ன செய்ய வேண்டும்?
ஒரு நிதி நிறுவனம் அல்லது குத்தகை நிறுவனம் வாகனத்தை மீட்க
விரும்பினால், அவர்கள் பின்பற்ற வேண்டிய கட்டாயமான சட்ட நடைமுறை:
இவற்றை தவிர வேறு எந்த முறைமைகளும் அவை யார் மூலம் செய்தாலும்
அவை சட்டரீதியானவை அல்ல.
Recovery Agents? Private Collection persons? அழுத்தம் கொடுக்கும்
குழுக்கள்? இலங்கையில் சட்டரீதியாக “அங்கீகாரம் இல்லை”!
Central Bank 2024 Guidelines:
“No licensed finance company shall engage or authorize
third-party recovery agents to seize vehicles.”
இவை எல்லாம் தண்டனை சட்டக் கோவையின் படி (Penal Code) தண்டனைக்குரிய
குற்றம்.
பலவந்தமாக Repossession நடந்தால் கீழ்வரும் பிரிவுகளின் கீழ்
Company மற்றும் Agents மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய முடியும் :
#Sec.
367 – Theft (திருட்டு)
#Sec.
380 - Robbery (கொள்ளை)
#Sec.
386 – Misappropriation
#Sec.
434 – Criminal Trespass
#Sec.
486 – Criminal Intimidation
#Sec.
314–317 – Assault
“நிறுவனம் தாமே வாகனத்தின் உரிமையாளர்” என்ற காரணம் இந்த குற்றச்சாட்டை
இல்லாமல் செய்யாது ஏன் தெரியுமா?
ஏனெனில் சட்டப்படி மேலும் உடன்படிக்கையின் படியும் குறித்த
வாகனத்தை வைத்திருக்கும் உரிமை (Possession) lesse ஆகிய உங்களுடையது...!
Civil Procedure Code (CPC) என்ன சொல்கிறது?
அண்மைய நீதிமன்ற தீர்ப்புகள் (2022–2024) இலங்கை நீதிமன்ற
தீர்ப்புக்கள் தெளிவாகச் சொன்னவை :
1. Self-help Repossession = Illegal
Supreme Court: “Finance companies cannot take law into
their own hands.”
“Borrower’s right to peaceful possession is
constitutionally protected.”
2. Recovery Agents = Unauthorized
High Court: “Private recovery personnel have no legal
status.”
3. Fundamental Rights Violated
Police உதவியோடு வாகனம் எடுத்தால், அது FR violation
(Article 12, 13).
பல வழக்குகளில் நிதி நிறுவனங்கள்
1. இழப்பீடு (damages)
2. FR compensation (அடிப்படை உரிமை மீறல் நஷ்ட ஈடு)
3. கடுமையான கண்டனம் என்பன வழங்கப்பட்டுள்ளன.
அவர்கள் பலவந்தமாக உங்கள் வாகனத்தை எடுத்தால் நீங்கள் செய்ய
வேண்டியது?
1. உடனடியாக பொலிஸ் நிலையத்தில் Theft, Intimidation,
Trespass, Unlawful assembly, Assault போன்ற குற்றங்களுக்காக முறைப்பாடு செய்யவும்.
2. Fundamental Rights case (Supreme Court) குறித்த நடவடிக்கைக்கு
Police உதவியிருந்தால் அடிப்படை உரிமை மீறல் குற்றம் மீது வழக்கு தாக்கல் செய்யலாம்.
3. District Court - Damages Claim
சட்டவிரோத Repossession காரணமாக இழப்பு ஏற்பட்டால் மாவட்ட
நீதிமன்றில் இழப்பீடு கோரலாம்.
“தவணைத் தொகை தாமதம் என்ற காரணத்தால் எந்த நிதி நிறுவனமும்
உங்கள் வாகனத்தை ‘பலவந்தமாக’ எடுத்துச் செல்லும் உரிமை
இலங்கையின் எந்தச் சட்டத்திலும் கிடையாது!”
2025 வரை உள்ள அண்மைய சட்டங்களின் படி:
#Police
அனுமதி இல்லாமல்
#Court
Order இல்லாமல்
#Fiscal
Officer இல்லாமல்
யாரும் உங்கள் வாகனத்தை பலவந்தமாக எடுக்க முடியாது.
அவ்வாறு வாகனத்தை பலவந்தமாக எடுத்தால் உடனே Police
Complaint, FR Case, Damages Case செய்யலாம்...!
“தவணைத் தொகை தாமதம்” குற்றமல்ல. ஆனால் வாகனத்தை பலவந்தமாக
பறிப்பது — ஒரு சட்டவிரோத குற்றம்!”
முக்கிய குறிப்பு : இந்த பதிவு கல்வி மற்றும் சட்ட விழிப்புணர்வு
நோக்கத்திற்காக மட்டுமே பதிவிடப்படுகின்றது மாறாக வேறு எந்த நோக்கமும் அல்ல. மேலும்
இந்த சட்டம் பல விதிமுறைகள் விதிவிலக்குகள் கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் கொண்டது
என்பதையும் கருத்தில் கொள்ளவும். உங்களுடைய தனிப்பட்ட வழக்கு தொடர்பில் உங்களுடைய தனிப்பட்ட
சட்டத்தரணியை அணுகுங்கள். இது முழுமையான சட்ட ஆலோசணையாக அமையாது.
சட்டத்தரணி
குமாரசிங்கம் கம்ஷன்
0 கருத்துகள்