புதிய கல்வி சீர்திருத்தம் யாருக்கு?
இலங்கையின் கல்வி மறுசீரமைப்பில் 2015 தொடக்கம் 2025 வரையான பத்து வருட காலப்பகுதியில் 09 கல்வியமைச்சர்களின் காலப்பகுதியும் மிக முக்கியமானது.இந்த கல்வி சீர்த்திருத்தமும் தனியாக ஆளுங்கட்சியின் கல்விக் கொள்கை என யாராலும் வாதிட முடியாது.இச்சீர்த் திருத்தத்தின் வரைவில் எல்லா அரசாங்கங்களின் பங்கும் உள்ளது என்பது தானே உண்மை.
இதன் படி கல்வியமைச்சர்களின் விபரமும்
அதன் வரைவுகளும் முன் மொழிவுகளும் கீழே
சுருக்கமாகப் பார்க்கலாம்
கல்விச் சீர்திருத்தங்களின் ஆரம்பம்
(2015 - 2019)
அமைச்சர் அகில விராஜ் காரியவசம் காலம்
முக்கிய கருப்பொருள்:
"13 வருட கட்டாயக் கல்வி"
(தொழில்நுட்பப் பாடத்துறையை அறிமுகப்படுத்தல்
முக்கியத்துவம்:
சாதாரண தரத்தில் (O/L) சித்தியடையாத மாணவர்கள்
பாடசாலையை விட்டு வெளியேறுவதற்குப் பதிலாக, அவர்களுக்கு தொழிற்பயிற்சியை வழங்குவதை
நோக்கமாகக் கொண்டது.
தொடர்புடைய ஆவணங்கள்:
13 வருட உறுதிப்படுத்தப்பட்ட கல்வித்
திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சுற்றறிக்கை (2017/2018).
"அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை"
திட்ட அறிக்கைகள்.
அரசியல் மாற்றங்கள் (2019 - 2020)
நல்லாட்சி மற்றும் இடைக்கால அரசாங்கம்
2019 (முற்பகுதி) - 2019 நவம்பர்:
ஜனாதிபதி: மைத்திரிபால சிறிசேன |
பிரதமர்: ரணில் விக்ரமசிங்க.
கல்வி அமைச்சர்: அகில விராஜ் காரியவசம்
(அடிப்படைக் கொள்கைகள் உருவாக்கப்பட்ட
காலம்)
2019 நவம்பர் - 2020 ஆகஸ்ட் (இடைக்கால
அரசு)
ஜனாதிபதி: கோட்டாபய ராஜபக்ச
பிரதமர்: மஹிந்த ராஜபக்ச.
கல்வி அமைச்சர்: டளஸ் அழகப்பெரும.
கொள்கை வரைவு மற்றும் இணையக் கல்வி (2020 - 2022)
பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் காலம்
முக்கிய கருப்பொருள்:
"சௌபாக்கிய நோக்கு" திட்டத்தின்
கீழ் கல்விச் சீர்திருத்தங்கள்.
முக்கியத்துவம்:
தேசிய கல்வி ஆணைக்குழுவினால் (NEC) புதிய
கல்விக் கொள்கையைத் தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. பரீட்சை மையக் கல்வியிலிருந்து
விலகிச் செல்வது குறித்த கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டன.
தொடர்புடைய ஆவணங்கள்:
தேசிய கல்விக் கொள்கை கட்டமைப்பு (வரைபு
- 2020)
இணையவழிக் கல்வியை (Online
Education) முறைப்படுத்துவதற்கான சுற்றறிக்கை (E-thaksalawa திட்டம்)
நெருக்கடி நிலை மற்றும் குறுகிய காலம் (2022)
2020 ஆகஸ்ட் - 2022 ஏப்ரல்:
கல்வி அமைச்சர்: பேராசிரியர் ஜி.எல்.
பீரிஸ்
(பாடத்திட்டச் சீர்திருத்தக் கலந்துரையாடல்கள்
ஆரம்பம்)
2022 ஏப்ரல் - 2022 மே (நெருக்கடி காலம்)
கல்வி அமைச்சர்: தினேஷ் குணவர்தன
(மிகக் குறுகிய காலப்பகுதி)
உருமாற்றக் கல்விச் சீர்திருத்தங்கள் (2022 - 2024)
கலாநிதி சுசில் பிரேமஜயந்த காலம்
முக்கிய கருப்பொருள்: உருமாற்றக் கல்விச்
சீர்திருத்தங்கள்
(Transformative Education Reforms).
முக்கியத்துவம்: 2026 முதல் நடைமுறைக்கு
வரவுள்ள மாற்றங்கள் (தரம் வாரியான முறைக்கு பதிலாக மாடியுல் (Module) முறை,
STEAM கல்வி முறை, பிரதேச கல்விச் சபைகள்
உருவாக்கம்) தீர்மானிக்கப்பட்டன.
தொடர்புடைய ஆவணங்கள்:
தேசிய கல்விக் கொள்கை
கட்டமைப்பு 2023-2033 அமைச்சரவையினால்
அங்கீகரிக்கப்பட்ட மிக முக்கியமான ஆவணம்.
STEAM கல்வி (அறிவியல், தொழில்நுட்பம்,
பொறியியல், கலை, கணிதம்) அறிமுகம்.
தரம் 1-5 மற்றும் முன்பள்ளிகளுக்கான புதிய
பாடத்திட்ட வழிகாட்டல்கள்.
தற்போதைய நிலை (2024 செப்டம்பர் முதல் இன்று வரை)
தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம்
* ஜனாதிபதி: அநுர குமார திஸாநாயக்க.
* பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர்: கலாநிதி
ஹரிணி அமரசூரிய.
தற்போதைய நிலை: ஏற்கனவே திட்டமிடப்பட்ட
கல்விச் சீர்திருத்தங்களைச் செயற்படுத்தும் மற்றும் நடைமுறைப்படுத்தும் கட்டம்.
இத்தகைய கட்டங்களைத் தாண்டி வந்த கலைத்
திட்ட மாற்றத்துக்காக அரசாங்கம் செலவளித்த தொகையை ஈடு கட்டுபவர் யார்?
பாட விதான மாற்றத்துக்கான வேலைப்பணிக்கான
செலவை யார் ஈடு செய்வார் ?
கல்வியியலாளர்களின் பயிற்சி நேரம் ,காலவிரயம்
,செலவை ஈடு செய்பவர் யார் ?
ஆசிரியப் பயிற்சி ஆசிரியர்களின் நேரம்
காலம் செலவை செலுத்துபவர் யார் ?
அதிபர்கள் நேர அட்டவணைத் தயாரிப்பு பணி
முதல் திட்டமிடலுக்கான வேலைப் பணிக்கான மன உளைச்சலுக்குரிய. நிவாரணம் ?
பெற்றோர் மாணவர் சிரமம் செலவினம் மன உளைச்சல்
?
மீண்டும் தரம் 06 க்கான பாட நூல் அச்சடித்தல்
வழங்குதல் செலவு ?
மொடியூல் தயாரிப்பு அச்சுப் பதிவு செலவு
?
வினியோகச் செலவு ?
அடுக்கிக் கொண்டே செல்லும் வினாக்களுக்கு
விடைத் தருவது யார் ?
. ஐ.எம்.ஜெமீல்
0 கருத்துகள்