இலங்கை கடவுச்சீட்டு (Passport) பெறுவது எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா?
இலங்கை கடவுச்சீட்டு (Passport) பெறுபவர்களுக்கான தகவல்கள் 
நீங்கள் புதிய பாஸ்போர்ட் எடுக்கத் திட்டமிடுகிறீர்களா? நடைமுறைக்கு வந்துள்ள முக்கியமான மாற்றங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் இதோ!
முக்கிய மாற்றங்கள்:புதிய நிறம் & தொடர்: பழைய சிவப்பு நிற ("N" Series) பாஸ்போர்ட்டுக்கு பதிலாக, இப்போது Navy Blue நிறத்தில் "P" Series பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது.
Middle East பாஸ்போர்ட் இல்லை: இனி "மத்திய கிழக்கு நாடுகளுக்கு மட்டும்" (Middle East Only) என்ற பாஸ்போர்ட் கிடையாது. அனைவருக்கும் "All Countries" (அனைத்து நாடுகளுக்கும் செல்லக்கூடிய) பாஸ்போர்ட் மட்டுமே வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை (படிமுறைகள்):
குடிவரவுத் திணைக்களத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டுடியோவில் (Authorized Studio) புகைப்படம் எடுக்க வேண்டும். அவர்கள் தரும் Photo Reference Number உள்ள ரசீதை மட்டும் கொண்டு செல்லுங்கள்.
தேவையான ஆவணங்கள் (Originals + Photocopies):
பிறப்புச் சான்றிதழ் (மூலப்பிரதி).
தேசிய அடையாள அட்டை (NIC).
பழைய பாஸ்போர்ட் (இருந்தால்).
ஸ்டுடியோ ரசீது.(மொழிபெயர்ப்புச் சான்றிதழ்கள் ஏற்கப்படாது, ஒரிஜினல் பிரதிகள் அவசியம்) .
கட்டண விபரங்கள் (2026):
ஒரு நாள் சேவை (Urgent Service): ரூ. 20,000
சாதாரண சேவை (Normal Service): ரூ. 10,000 (16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு 
:) 1. தனி கடவுச்சீட்டு கட்டாயம் (Individual Passport)
முன்பு போல் பெற்றோரின் பாஸ்போர்ட்டில் குழந்தைகளின் பெயரைச் சேர்க்க முடியாது. பிறந்த குழந்தை முதல் 16 வயது வரையிலான அனைவருக்கும் இப்போது தனித்தனி கடவுச்சீட்டு எடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2. கைரேகை தேவையா? (Biometrics) 
16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கைரேகை (Fingerprints) வைக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது குழந்தை நேரில் வருவது அவசியம்.
சிறுவர்களுக்கு தேவையான முக்கிய ஆவணங்கள்
குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் (Original)
தாய் & தந்தையின் NIC (Original + Copies)
இரு பெற்றோரின் ஒப்புதல் கடிதம் (Consent Letter)
ஸ்டுடியோ ரசீது.
திருமணம் / விவாகரத்து / மரணம் / தத்தெடுப்பு இருந்தால் – சம்பந்தப்பட்ட Court Order / Certificate
பெற்றோரில் ஒருவர் வெளிநாட்டில் இருக்கும்போது, குழந்தைக்கு கடவுச்சீட்டு (Passport) விண்ணப்பிப்பது எப்படி?
வெளிநாட்டில் இருக்கும் பெற்றோர்: அங்குள்ள இலங்கைத் தூதரகத்திற்குச் (Embassy) சென்று, சம்மதக் கடிதம் (Consent Letter) மற்றும் உங்கள் கடவுச்சீட்டு பிரதியை அதிகாரி முன்னிலையில் கையொப்பமிட்டு அத்தாட்சிப்படுத்த (Attest) வேண்டும்.
குறிப்பு: சாதாரண கடிதம் போதாது, தூதரக முத்திரை கட்டாயம்!
இலங்கையில் இருக்கும் பெற்றோர்: வெளிநாட்டில் இருந்து வந்த அத்தாட்சிப்படுத்தப்பட்ட கடிதத்தின் மூலப் பிரதியுடன், மேலே குறிப்பிட்ட ஆவணங்களை எடுத்துக்கொண்டு பிள்ளையுடன் Passport Office செல்லவும்: மேலே குறிப்பிட்ட ஆவணங்களுடன்
திருமணச் சான்றிதழ் (Original & Copy) எடுத்து செல்லவும் • 10 வருட பாஸ்போர்ட் (விருப்பம்)
Normal - Rs. 10,000 / One Day - Rs. 20,000
பாஸ்போர்ட் தொலைந்துவிட்டால்? பாஸ்போர்ட் தொலைந்தால் புதிய பாஸ்போர்ட் கட்டணத்துடன் சேர்த்து + அபராதமும் (Fine) செலுத்த வேண்டும்:பாஸ்போர்ட் பெற்று 1 வருடத்திற்குள் தொலைந்தால்: ரூ. 20,000 அபராதம்.
1 வருடத்திற்குப் பின் தொலைந்தால்: ரூ. 15,000 அபராதம்.
விண்ணப்பிக்க முடியும் இடங்கள்• Battaramulla – Head Office
• Kandy, Matara, Vavuniya, Kurunegala, Jaffna (One Day Service கிடைக்கும்)
நேரம்: காலை 7:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படும். சிலவேளை கூட்டம் அதிகமாக இருப்பதால் அதிகாலையிலேயே (காலை 6 மணிக்குள்) செல்வது நல்லது.பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்! 
விழினையடி, நிசார் ஹாட்வெயார் அருகாமையில்
WhatsApp / Call: 076 766 3552
0 கருத்துகள்