ரூபாய் 2000 நினைவு பணத்தாள் பற்றி அறிய வேண்டிய விடயங்கள்

ரூபாய் 2000  நினைவு பணத்தாள் பற்றி அறிய வேண்டிய விடயங்கள் 




வெளியீடு: இலங்கை மத்திய வங்கியின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த 2,000 ரூபாய் நினைவு பணத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.

கருப்பொருள்: "சுபீட்சத்திற்கான ஸ்திரத்தன்மை" (Stability for Prosperity) எனும் கருப்பொருளின் கீழ் இது உருவாக்கப்பட்டுள்ளது.

வரலாற்று நிகழ்வு: இது மத்திய வங்கியினால் வெளியிடப்படும் 5வது நினைவு பணத்தாள் ஆகும்.

முக்கிய பிரமுகர்கள்: ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்கவினால், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் இப்பணத்தாள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள்

முன்புறம்: மத்திய வங்கி தலைமையக கட்டிடம், கொழும்பு கலங்கரை விளக்க மணிக்கூட்டுக் கோபுரம் மற்றும் கொழும்பு நகரத்தின் நவீன தோற்றம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

பின்புறம்: இலங்கையின் வரைபடம், அல்லி மலர் மற்றும் மத்திய வங்கியின் தொலைநோக்கு அறிக்கை ஆகியவை இடம்பெற்றுள்ளன.

பாதுகாப்பு: நீல நிறத்தில் இருந்து பச்சை நிறத்திற்கு மாறும் 5 மி.மீ அகலமான பாதுகாப்பு நூல் மற்றும் கண்பார்வை குறைபாடுள்ளவர்கள் தொட்டுணரக்கூடிய வகையில் 6 உயர்த்தப்பட்ட கோடுகள் (டைமண்ட் வடிவம்) இதில் உள்ளன.

ஆயுட்காலம்: பணத்தாள் நீண்ட காலம் புழக்கத்தில் இருப்பதற்காக அதன் மேல் பகுதியில் விசேட வார்னிஷ் (varnish) பூசப்பட்டுள்ளது.

புழக்கம் மற்றும் தொழில்நுட்ப விபரங்கள்

அளவு மற்றும் வண்ணம்: இப்பணத்தாள் 151மி.மீ x 67மி.மீ அளவுடையது மற்றும் நீல நிறத்தை பிரதானமாக கொண்டது.

எண்ணிக்கை: 50 மில்லியன் பணத்தாள்கள் மட்டுமே அச்சிடப்பட்டுள்ளன. இவை இன்று முதல் வணிக வங்கிகள் ஊடாக புழக்கத்திற்கு விடப்படும்.

செல்லுபடியாகும் தன்மை: இது இலங்கையில் எவ்வித கொடுப்பனவுகளுக்கும் பயன்படுத்தக்கூடிய சட்டபூர்வமான பணத்தாள் ஆகும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்