QR Code பதிவதில் உங்களுக்கு சிக்கல் உள்ளதா?
வாகனம் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளதா?
கவலை வேண்டாம், தெரியாதோருக்கும் பகிருங்கள்!!!
எரிபொருள் QR Code தொடர்பான
முக்கிய விழிப்புணர்வு!
இலங்கையில் எரிபொருள் பெறுவதற்கான National Fuel Pass (QR) முறையில், உங்களின் பழைய மொபைல் எண் தொலைந்துவிட்டதா? அல்லது வேலை செய்யவில்லையா? கவலைப்பட வேண்டாம்!
பழைய பதிவை நீக்கிவிட்டு, புதிய மொபைல் எண்ணில் மீண்டும் QR Code பெறுவது எப்படி? இதோ எளிய வழிமுறை:
உங்கள் வாகன இலக்கத்தை பழைய எண்ணில் இருந்து விடுவிக்க, இப்போது நீங்கள் பயன்படுத்தும் புதிய மொபைல் எண்ணில் இருந்து ஒரு SMS அனுப்ப வேண்டும்.
FUEL (இடைவெளி) DELETE (இடைவெளி) [உங்கள் வாகன இலக்கம்]
(உதாரணம்: FUEL DELETE WPABC1234)
பழைய பதிவு நீக்கப்பட்டவுடன் (Success Message வந்ததும்), கீழே உள்ள இணையதளத்திற்குச் செல்லுங்கள்:
உங்கள் புதிய மொபைல் எண்ணைக் கொடுத்து உள்நுழையவும் (OTP வரும்).
உங்கள் வாகன இலக்கம் மற்றும் Chassis Number (வாகனப் பதிவுப் புத்தகத்தில் இருக்கும் எண்) ஆகியவற்றை உள்ளிடவும்.
இப்போது உங்களுக்கான புதிய QR Code கிடைத்துவிடும்!
SMS அனுப்பும் போது வாகன இலக்கங்களுக்கு இடையே இடைவெளி (Space) விட வேண்டாம்.
இந்தத் தகவல் தெரியாமல் பல நண்பர்கள் எரிபொருள் பெற முடியாமல் சிரமப்படலாம். எனவே, இந்தப்பதிவை Share செய்து மற்றவர்களுக்கும் உதவுங்கள்!
முக்கிய குறிப்புகள் -
உங்கள் வாகனத்தின் உரிமையாளர் அல்லது பதிவு செய்யப்பட்ட தொலைபேசி இலக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றால், நீங்கள் மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை.
fuelpass.gov.lkஇணையதளத்திற்குச் சென்று உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிட்டு, வரும் OTP குறியீட்டைப் பயன்படுத்தி பழைய QR குறியீட்டையே மீண்டும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வாகனத்தின் உரிமையாளர் மாறியிருந்தால் அல்லது புதிய தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்துபவராக இருந்தால், நீங்கள் இணையதளத்தில் 'Re-registration' அல்லது 'Update' பகுதிக்குச் சென்று புதிய விபரங்களை உள்ளிட்டு மீண்டும் பதிவு செய்ய வேண்டும்.
நீங்கள் புதிதாக வாங்கிய வாகனத்தை இதுவரை பதிவு செய்யவில்லை எனில், fuelpass.gov.lk தளத்தில் 'Vehicle Registration' என்பதைத் தெரிவு செய்து, வாகன இலக்கம், சேஸ் (Chassis) இலக்கம் மற்றும் ஏனைய விபரங்களை வழங்கி புதிய QR குறியீட்டைப் பெற்றுக்கொள்ளலாம்.
உங்கள் QR குறியீட்டைத் தொலைத்துவிட்டால், Fuel <space> QR <space> வாகன எண் என டைப் செய்து 0766220000 என்ற எண்ணிற்கு SMS அனுப்பியும் பெற்றுக்கொள்ள முடியும்.

0 கருத்துகள்