ஜனாதிபதி அநுரவின் அதிரடி திட்டம்: குழந்தைகள் நலனுக்கு புதிய நம்பிக்கை.

 ஜனாதிபதி அநுரவின் அதிரடி திட்டம்: குழந்தைகள் நலனுக்கு புதிய நம்பிக்கை. 


நாட்டின் மிக விலைமதிப்பற்ற சொத்தான குழந்தைகளைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் அடிப்படைக் கடமை என ஜனாதிபதி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் நேற்று (17) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற "திவியதா சாவியக்" வீடமைப்புத் திட்டத்தின் தொடக்க விழாவிலேயே ஜனாதிபதி இந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

இத்திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள் வருமாறு:

🏠 ரூ. 20 இலட்சம் வீடமைப்பு மானியம்

சிறுவர் மேம்பாட்டு மையங்களில் வளர்ந்து 18 வயதை எட்டி சமூகத்தில் இணையும் இளைஞர்களுக்கும், பாதுகாப்பற்ற நிலையில் வாழும் குழந்தைகளுக்கும் சொந்த வீடு கட்ட தலா இரண்டு மில்லியன் ரூபாய் வழங்கப்படும்.

🦞 இரட்டிப்பாக்கப்பட்ட நிதி

கடந்த ஆண்டு இதற்காக 10 இலட்சம் மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அது 20 இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கூடுதல் நிதி ஒதுக்கவும் அரசாங்கம் தயார் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்!

💲 மாதாந்தம் ரூ. 5,000 சேமிப்பு

சிறுவர் மையங்களில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் வங்கிக் கணக்கு திறக்கப்பட்டு, அரசு சார்பில் மாதந்தோறும் ரூ. 5,000 வைப்பிலிடப்படும். 18 வயதில் அவர்கள் சமூகத்தில் நுழையும் போது இது அவர்களுக்கு ஒரு பெரும் நிதிப் பாதுகாப்பாக அமையும்.

✅ ஜனாதிபதியின் உருக்கமான வேண்டுகோள்

"எந்தக் குழந்தையும் அன்பும் அரவணைப்பும் இன்றி, பாதுகாப்பற்ற சூழலில் வாழக்கூடாது. குழந்தைகளைப் பாதுகாப்பதில் பெற்றோர், சமூகம் மற்றும் அரசு ஆகிய அனைவருக்கும் பொறுப்பு உள்ளது. எந்தக் குழந்தையும் தீங்குக்கு உள்ளாக்கப்படக்கூடாது என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது" என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்