உயர் தரம் (A/L) கற்பதற்கு O/L பெறுபேறு எவ்வாறு அமைய வேண்டும்?
பல சுற்றறிக்கைகள் மற்றும் திருத்தங்கள் இருப்பதால் இந்த விடயத்தில் பல ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது. நமது மாணவ செல்வங்களின் எதிர்காலம் சிறப்புற அமைய, தெளிவான வழிகாட்டலுடன் இந்தக் கட்டுரையை வழங்குகிறேன்.
O/L Pass என்பது என்ன?
O/L Pass என்பது 6 S ஆகும். இது பல்கலைக்கழகம் செல்வதற்கான அடிப்படைத் தகுதியும் ஆகும்.
- ஒரு மாணவன் 6 S பெற்று கணிதத்தில் W எடுத்தால், அடுத்து வரும் 2 ஆண்டுகளுக்குள் கணிதத்தில் S எடுத்தால் O/L Pass தகுதி பெறுவார்.
- 6 பாடம் pass ஆகி தமிழில் W எடுத்தால், அடுத்து வரும் 1 வருடத்திற்குள் தமிழில் S எடுத்தால் O/L Pass தகுதி பெறுவார்.
- Vocational Stream-இல் எல்லாப் பாடங்களிலும் W எடுத்தாலும் கற்க முடியும். ஆனால் 6 S பெற்றாலும் மற்ற streams-இல் கற்க முடியாது.
பாடசாலையில் இணைந்து A/L கற்பதற்கான நிபந்தனைகள்
1. பொதுவான குறைந்தபட்ச நிபந்தனை
எந்த stream-ஆக இருந்தாலும் 3 C மற்றும் 3 S அவசியம். கணிதமும் தமிழும் W இல்லாமல் இருக்க வேண்டும்.
2. Bio Science
3 C, 3 S உடன் விஞ்ஞானத்தில் C அவசியம்.
3. Maths Stream
3 C, 3 S உடன் கணிதத்தில் C மற்றும் விஞ்ஞானத்தில் S அவசியம்.
4. Commerce
3 C, 3 S உடன், C சித்திகளில் வர்த்தகம் அல்லது முயற்சியாண்மைக் கற்கை அல்லது கணிதம் அல்லது வரலாறு ஆகியவற்றில் ஒன்றில் C அவசியம்.
5. Arts Stream
- 3 C, 3 S, அல்லது
- கணிதம், தமிழ் pass செய்து 2 C, 4 S இருந்தால் — மீதமுள்ள S பாடங்களில் (கணிதம், தமிழ் தவிர்ந்து) 3 இருந்தால் SBA மூலம் 3வது C-க்காக கலைப்பிரிவில் இணையலாம். எந்தப் பாடத்தையும் தனியாக கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
கணிதம் / தமிழ் W எடுத்தோருக்கான Pending Process
- 3 C, 3 S உடன் தமிழ் W ஆனால் — அடுத்த 1 வருடத்தில் தமிழில் S பெறவேண்டும்.
- 3 C, 3 S உடன் கணிதம் W ஆனால் — அடுத்த 2 வருடங்களில் கணிதத்தில் S பெறவேண்டும்.
இந்த மாணவர்களின் பெயர்கள் Pending Roll -இல் மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும். வழமையான roll-இல் அல்ல. தேவையான பாடத்தில் pass ஆன பின்னரே Pending Roll-இல் இருந்து நீக்கி வழமையான roll-இல் சேர்க்க வேண்டும்.
குறிப்பு: A/L விண்ணப்பத்திற்குப் பின் O/L பெறுபேறுகள் வெளியாவதால், கணிதப் பாட 2 வருட நிபந்தனையின் காரணமாக நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதற்கான தீர்வாக இரு வழிமுறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன:
- O/L பெறுபேறு A/L விண்ணப்பத்திற்கு முன்னரே வெளியிடப்பட வேண்டும், அல்லது
- கணிதத்தில் W பெற்று இணைந்த மாணவர் 1 வருடத்திற்குள் S பெறவில்லையெனில் பாடசாலையில் இருந்து நீக்கப்பட வேண்டும்.
இவ்வாறு நீக்கப்படும் மாணவர்களுக்கு, அடுத்த வருடம் O/L-இல் S பெற்றால் தனிப்பட்ட பரீட்சார்த்தியாக A/L தோற்றி பல்கலைக்கழகம் செல்ல முடியும் என ஆலோசனை வழங்க வேண்டும். 2 வருடமும் தவறினால் மட்டுமே பல்கலைக்கழகம் செல்ல முடியாது.
தொழில்நுட்பப் பிரிவு (Technical Stream)
| பிரிவு | நிபந்தனை |
|---|---|
| Engineering Technology (E-Tech) | 3 C, 3 S + கணிதம் S + விஞ்ஞானம் S (இரண்டிலும் W இருந்தால் தகுதியில்லை) |
| Bio Technology (B-Tech) | 3 C, 3 S + விஞ்ஞானம் S (கணிதம் W ஆனாலும் நிபந்தனையின் பேரில் இணைத்து குறிப்பிட்ட காலத்தில் S பெறச் செய்யலாம்) |
இரு வருட O/L பெறுபேறுகளுடன் கலைத்துறையில் சேர்க்கை
முதல் வருடம் 3 C, 2 S (5 பாடங்கள்) பெற்றிருந்தால், அடுத்த வருட O/L பெறுபேற்றுடன் இணைத்து பாடசாலையில் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் 3 C, 2 S இல்லாதவர்களை தவறான முறையில் இணைத்து, அடுத்த வருட பெறுபேற்றுடன் கற்க அனுமதிக்கக் கூடாது.
முக்கியக் குறிப்பு: ஒரே நேரத்தில் இரு நிபந்தனைகளுடன் (எ.கா. கணிதமும் தமிழும் W, அல்லது 2 C மட்டும் இருக்கும் நிலையில்) மாணவர்களை இணைக்க முடியாது. 3வது C-க்காக SBA பரிசீலிக்க முடியாது.
கலைப்பிரிவு மற்றும் B-Tech-க்கு மட்டுமே நிபந்தனை அடிப்படையில் இணைக்க முடியும். Bio, Maths, Commerce, E-Tech ஆகியவற்றில் இது சாத்தியமில்லை.
ஆசிரியர்களுக்கான வேண்டுகோள்
பிரத்தியேக வகுப்புகளுக்கு (tuition) அதிக மாணவர்களை ஈர்க்கும் நோக்கில், தவறான வழிமுறையில் மாணவர்களை வழிநடத்தாமல், சரியான தகவலின் அடிப்படையில் ஆலோசனை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
எழுதியவர்: K.T. Brownsen — Career Guidance & Counselling
இக்கட்டுரை தற்போதைய சுற்றறிக்கைகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. அதிகாரப்பூர்வ தீர்மானங்களுக்கு கல்வி அமைச்சு/பரீட்சைத் திணைக்களத்தின் சமீபத்திய சுற்றறிக்கைகளை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

0 கருத்துகள்