ஏற்புவலி (Tetanus) — அறிந்திருங்கள், பாதுகாத்துக்கொள்ளுங்கள்!
Tetanus Toxoid தடுப்பூசி பற்றிய முழுமையான வழிகாட்டி
🦠 Tetanus என்றால் என்ன?
Clostridium tetani என்ற பக்டீரியாவால் ஏற்படும் உயிருக்கு ஆபத்தான தொற்று நோய்.
இது மண், தூசி, துரு படிந்த பொருட்கள், மிருக மலங்களில் காணப்படும்.
⚠️ காயம் சிறியதாக இருந்தாலும் ஆபத்து இருக்கலாம்!
🩸 எப்படி உடலுக்குள் நுழைகிறது?
- கத்தி வெட்டு / ஆணி குத்து காயம்
- மண் படிந்த காயம்
- எரிவு காயம் (Burns)
- ஊசி குத்திய காயம்
- உடைந்த கண்ணாடி காயம்
✅ துரு படிந்த பொருளால் மட்டுமல்ல — எந்த மண் படிந்த காயமும் ஆபத்தானது.
🚨 அறிகுறிகள் என்னென்ன?
(Lockjaw)
(Opisthotonus)
⚠️ சிகிச்சை இல்லையெனில் மரணம் நேரிடலாம். Tetanus ஒருவரிலிருந்து மற்றவருக்கு பரவாது.
🩺 காயம் ஏற்பட்டால் உடனே செய்வது:
1️⃣ சுத்தமான நீரால் காயத்தை கழுவவும்
2️⃣ சுத்தமாக வைத்திருக்கவும்
3️⃣ கடைசி tetanus தடுப்பூசி தேதியை நினைவில் கொள்ளவும்
4️⃣ தடுப்பூசி பதிவேட்டுடன் மருத்துவரை அணுகவும்
💉 Tetanus Toxoid தடுப்பூசி திட்டம்
WHO பரிந்துரை — குழந்தைப் பருவத்தில் 6 டோஸ்:
🔁 காயம் ஏற்பட்டால் — Booster எப்போது?
- 6 டோஸ் + 5 ஆண்டுக்குள் + சாதாரண காயம் → தேவையில்லை
- 6 டோஸ் + 5 ஆண்டுக்கு பின் + அசுத்த காயம் → 1 Booster அவசியம்
- 6 டோஸ் + 10 ஆண்டுக்கு பின் → 1 Booster அவசியம்
3 டோஸ் மட்டும் பெற்றவர்: 5 ஆண்டுக்கு மேல் ஆனால் Booster தேவை.
பெரிய / அசுத்த காயம் எனில் — Human Tetanus Immunoglobulin (TIG) வழங்கப்படும்.
இது உடனடி குறுகிய கால பாதுகாப்பு தரும். சரியான தடுப்பூசி பதிவுகளை எப்போதும் வைத்திருங்கள்!
🛡️ தடுப்பூசி பற்றி நினைவில் கொள்ளுங்கள்
- 1 டோஸ் மட்டும் — போதுமான பாதுகாப்பு தராது
- 2 டோஸ் பின் — பாதுகாப்பு உருவாகத் தொடங்கும்
- 3வது டோஸ் — ~100% நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்
- Tetanus ஒரு முறை வந்தால் உயிருக்கு ஆபத்து — ஆனால் தடுப்பூசியால் முழுமையாக தடுக்கலாம்

0 கருத்துகள்